முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா பிறந்தநாள்: 113 ஜோடி மணமக்களுக்கு திருமணம்

ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015      தமிழகம்
Image Unavailable

தஞ்சாவூர் - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67-வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த 113 ஜோடி மணமக்களுக்கு 72 வகை சிர்வரிசைகளுடன் பசு மாடும், கன்றும் வழங்கி திருமணம், தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெற்றது. ஏழாவது ஆண்டாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

மணவிழாவிற்கு தஞ்சை தெற்கு மாவட்டக் கழக செயலாளர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்  ஆர்.வைத்திலிங்கம் தலைமை வகித்து 113 ஜோடிகளுக்கு திருமணங்களை நடத்தி வைத்தார். 113 ஜோடி மணமக்களுக்கும் திருமாங்கல்யத்தை அமைச்சர் வைத்திலிங்கம் வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். தஞ்சை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் , தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி வரவேற்புரை ஆற்றினார். கழக விவசாயப் பிரிவு தலைவர் துரை. கோவிந்தராஜன், கழக விவசாயப்பிரிவுச் செயலாளர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத் தலைவர் கு.தங்கமுத்து முன்னிலை வகித்தார்.

மணமக்களை வாழ்த்தி தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.பாரதி மோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ஆர்.சிவபதி, முருகுமாறன், இளசை.ரவிச்சந்திரன், இரா.துரைக்கண்ணு, எம்.ரெத்தினசாமி, துரை.மணிவேல், கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ஏ.ஜி.தங்கப்பன், அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளர் தாமரை.ராஜேந்திரன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அமுதா ரவிச்சந்திரன், தஞ்சை தொகுதி செயலாளர் துரை.திருஞானம் , மாவட்ட பால்வளத் தலைவர் ஆர்.காந்தி, தமிழ்நாடு கயறு கூட்டுறவு இணையத் தலைவர் எஸ்நீலகண்டன், ஆகியோர் பேசினார்கள். மாவட்ட பால்வளத் தலைவர் ஆர்.காந்தி நன்றியுரை ஆற்றினார்.

ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த 113 ஜோடி மணமக்களுக்கு 4 கிராம் தங்கத்தாலி, மணமக்களுக்கு பட்டுப்புடவை, மணமகனுக்கு பட்டுவேட்டி, பட்டுச்சட்டை, பசுமாடும் கன்றும் , கட்டில், மெத்தை, பீரோ, டேபிள் பேன், காமாட்சி விளக்கு ஒன்று, குத்து விளக்கு இரண்டு, மண்விளக்கு ஒன்று, படி ஒன்று, சொம்பு ஒன்று, தூபக்கால் ஒன்று, பூஜை தாம்புலத்தட்டு ஒன்று, பூஜைக்கூடை ஒன்று, பூஜை மணி ஒன்று, பட்டுப்பாய் ஒன்று, ஜமுக்காளம் ஒன்று, பெட்ஷீட் ஒன்று, தலையணை இரண்டு, குக்கர் ஒன்று, தோசைக்கல் ஒன்று, பூரி டப்பா ஒன்று, மசால் டப்பா ஒன்று, டிஸ், குழிக்கரண்டி இரண்டு, தோசை திருப்பி, அன்னக்கை, மீன் கரண்டி, சாரணி, ஸ்பெஷல் லோட்டா, டம்ளர் இரண்டு, ஜாடி, ஜக்கு, சோப்பு டப்பா, எவர்சில்வர் சொம்பு, பூரிக்கட்டை, கேரியர், கறித்தட்டு இரண்டு, குண்டான் மூன்று, பால் கேன், கட்டை கேன், முறுக்கு அச்சு, எஸ்.எஸ்.சல்லடை, கலர் சாஸ்பன், முறம், சாப்பாடு தட்டு இரண்டு, சி.டி. தட்டு இரண்டு, பருப்பு சட்டி, கடாய், தேக்சா இரண்டு, பூ வாலி, அரிவாள்மனை, இடுக்கி, தேங்காய்திருவி, ஊதாங்குழல், இட்லிப்பானை, சம்படம் இரண்டு, கொத்து சட்டி, சில்வர் குடம், தவளை, மூடி இரண்டு, ஹாட்பாக்ஸ், குவளை, தாம்பாலத்தட்டு, சிப்சர், குழித்தட்டு ஆகிய 72 வகை சிர்வரிசைகளை அமைச்சர் வைத்திலிங்கம் மணமக்களுக்கு வழங்கினார்.பின்னர் மணமக்களுக்கும் அவர்களது உற்றார் உறவினர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

மேற்கண்ட நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.என்.இராமச்சந்திரன், கே.பஞ்சவர்ணம், எம்.ஜி.எம்.சுப்பிரமணியம், இராம.இராமநாதன், முன்னாள் மாவட்ட செயலாளர் இரா.கார்த்திகேயன், தொகுதி செயலாளர்கள் கோ.தேவதாஸ், மாவட்ட கழக துணைச் செயலாளர் பொன் முத்துவேல்,  முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.வி.கோபால், மாவட்ட பிரிவுச் செயலாளர்கள் எம்.ஜெயபிரகாஷ் நாராயணன், ஆ.மலைஅய்யன், மா.சேகர், டி.கே.சாமிஅய்யா, வீ.புண்ணியமூர்த்தி, பட்டுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் எஸ்ஆர்.ஜவஹர்பாபு, ஒன்றிய நகர கழகச் செயலாளர்கள் வீ.பண்டரிநாதன், துரை.வீரணன், ஆர்.சத்தியமூர்த்தி, துரை.செந்தில், பீ.சுப்ரமணியன், உ.துரைமாணிக்கம், குழ.சுந்தர்ராஜன், வீ.கே.டி.பாரதி, என். இளங்கோவன், ஏ.வி.சூரியநாராயணன், அசோக்குமார், அழகு த.சின்னையன், மாவட்ட இலக்கிய அணி இணைச்செயலாளர் எஸ்பிரகாசம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், அனைத்துப் பிரிவு நிர்வாகிகளும், மகளிர் அணியினரும், பொதுமக்களும்  பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து