முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

307 ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா

ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் - உலக கோப்பை லீக்கில் நேற்று மெல்போர்ன் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் 307 ரன்கள் குவித்த்து இந்தியா அபார வெற்றி பெற்றது. திறமையான  அணி என்று புகழப்பட்ட தென் ஆப் ரிக்கா வெறும் 103 ரனகள் மட்டும் எடுத்து படுதோல்வியை தழுவியது.

உலக கோப்பை  லீக்  ஆட்டம் நேற்று மெல்போர்ன் மைதானத்தில் நடந்தது. இதில் இந்தியாவும், தென் ஆப்ரிக்காவும் மோதின.   டாஸ் வென்ற இந்திய அணி பேட் செய்ய தீர்மானித்தது.ஆட்டம் தொடங்கியதும் ரோகித் சர்மா ரன் அவுட் ஆனார். ஆனாலும் நிலை குலையாத இந்திய வீிரர்கள் தவான்,   ரகானே ஆகியோர் அடித்து ஆடி ரன்களை குவித்தனர்.

ஷிகர் தவானின் அபார சதம், விராத் கோஹ்லி, அஜிங்கியா ரஹானேவின் சிறப்பான ஆட்டம், கேப்டன் டோணியின் கடைசி நேர அதிரடி காரணமாக இந்தியா, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்களைக் குவித்தது.
தென் ஆப்பிரி்க்காவின் பந்து வீச்சை மிக சாதுரியமாக நேற்று சந்தித்தது இந்தியா. ஆரம்பத்தில் அமைதியாக ஆடிய இந்தியா பின்னர் அதிரடிக்கு மாறியது. குறிப்பாக ஷிகர் தவான் தென் ஆப்பிரிக்க வேகப் பந்து வீச்சை அடித்து நோறுக்கி விட்டார். ஸ்டெயின், பிலான்டர், மார்னி மார்க்கல் என அனைவரையும் அடித்து நொறுக்கினார்.

ரோஹித் சர்மா டக் அவுட் ஆன பிறகு கோஹ்லியும், தவானும் ஜோடி சேர்ந்தனர். கோஹ்லி 46 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆகி விட்டார். தொடர்ந்து ஷிகர் தவான் அதிரடியாக ஆடினார். 137 ரன்கள் எடுத்த நிலையில் தவான் ஆட்டமிழந்தார். முன்னதாக ரசிகர்களை உற்சாகப்படுத்திய வண்ணம் ரன்களைக் குவித்து வந்த ஷிகர் தவான் - விராத் கோஹ்லி ஜோடி 127 ரன்கள் சேர்த்து பிரிந்தது. 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இம்ரா் தாஹிர் பந்து வீச்சில் விராத் கோஹ்லி ஆட்டமிழந்தார். 27.1வது ஓவரில் தாஹிர் வீசிய பந்தை கோஹ்லி அடிக்க, அதை டூபிளஸிஸ் கேட்ச் செய்து கோஹ்லியை வெளியேற்றினார்.
 
தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு அச்சுறுத்தும், பயமுறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை தவானும், ரஹானேவும் சிறப்பாக ஆடினர். தவான் சிறப்பாக ஆடி இந்த உலக கோப்பையில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் போன பிறகு இந்தியாவின் ரன் வேகம் குறைந்தது. ரஹானே அதிரடியாக ஆடி வந்த நிலையில் அவர் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வந்தவர்கள் அடித்து ஆடுவதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. டோணி மட்டும் சற்று அதிரடியாக ஆடி 18 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இதில் தொடர்ச்சியாக அவர் 3 பவுண்டரிகளை விளாசி ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். கடைசி நேர சொதப்பல் காரணமாக இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்களை எடுத்தது.

308 என்ற கடினமான இலக்கை விரட்டிய தென் ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் குவின்டன் டி காக் வீழ்ந்த நிலையில் இந்தியாவின் பந்து வீச்சை சமாளித்து ஆடி வந்த அம்லா, 28 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் மோஹித் சர்மா வீசிய பந்தை தூக்கி அடித்து ஷமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இது முக்கியத் திருப்பமாக அமைந்தது. அடுத்து கேப்டன் ஏப் டிவில்லியர்ஸும், டுபிளஸ்ஸிஸ்ஸும் இணைந்து ரன் குவிக்க ஆரம்பித்தனர். இந்த ஜோடியை அருமையான ரன் அவுட் மூலம் கேப்டன் டோணியும், மோஹித் சர்மாவும் பிரித்தனர்.

ஏப் டிவில்லியர்ஸ் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டுபிளஸ்ஸிஸ்ஸை ஷிகர் தவான் கேட்ச் செய்தார். டுபிளஸ்ஸிஸ் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடி வீரர் ஜேபி டுமினியும் ஆட்டமிழந்தார். ஒரு ரன் எடுத்திருந்த ஸ்டெயினும் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வந்த தென் ஆப்பிரிக்கா 40.2 ஓவர்களில் அணைத்தது விக்கெட்களையும் இழந்தது. 177 ரன்களை மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது.
முக்கியமான அதிரடி வீரர்களான டிவில்லியர்ஸ், டுபிளஸ்ஸிஸ், மில்லர், அம்லா, டுமினி ஆகியோரை இந்திய பவுலர்கள் சரியான சமயத்தில் வீழ்த்தியதே இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது.

137 ரன்கள் எடுத்து இந்தியாவை பேட்டிங்கில் நிமிர வைத்த ஷிகர் தவான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தென் ஆப்பிரிக்காவின் வரலாற்றை முறியடித்தது இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் இதற்கு முன்பு 1992, 1999 மற்றும் 2011 ஆகிய உலகக் கோப்பைப் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 3 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்காதான் வென்றிருந்தது.

அந்த வரலாற்றை நேற்று திருத்தி எழுதி விட்டது இந்தியா. முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா வீழ்த்தியுள்ளது. கடந்த 1992 போட்டியில் இந்தியாவை தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வீ்ழ்த்தியிருந்தது. அந்தப் போட்டியில் இந்தியா 180 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா 181 ரன்கள் எடுத்து வென்றது. 1999 போட்டியில் இந்தியா 253 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா 254 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா. அந்த வகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா 308 ரன்கள் எடுத்தது. அதற்கு தென் ஆப்பிரிக்கா 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்கா வரலாற்றை மாற்றி அமைத்தது. இந்திய கேப்டன் டோணியின் கேப்டன்ஷிப்புக்கு முன்னாள் வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர். அபாரமான கேப்டன்ஷிப் என்று கங்குலி கூறியுள்ளார். பீல்டிங் வியூகம், பவுலிங் வியூகம் என டோணி உண்மையிலேயே ஒரு சிறந்த கேப்டன் என்று புகழந்து உள்ளனர்.

இந்தியாவின் வரலாற்றுச் சாதனையை மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல நகரங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் ரசிகர்கள் கொண்டாடினர். அடுத்து இந்தியா பிப்ரவரி 28ம் தேதி பெர்த்தில் நடைபெறும் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை சந்திக்கவுள்ளது. இதுவும் பகல் இரவுப் போட்டியாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து