முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருநாள் போட்டியில் தவானின் அதிகபட்ச ரன் 137

ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

உலக கோப்பை லீக் போட்டியில் முதலில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா, பலம் வாய்ந்த அணி என்று புகழப்பட்ட தென் ஆப்பிரிக்காவை நேற்று இந்தியா படுதோல்வியடைய செய்தது. இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ஷிக்கர் தவான் நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் அபாரமாக விளையாடினார். ஒபனிங் பேடஸ்மேனாக களம் இறங்கிய தவான் சுமார் மூன்றரை மணி நேரம் களத்தில் நின்று தென் ஆப்பிரிக்காவின் பந்துகளை துவம்சம் செய்தார். 

இறுதியில் 146 பந்துகளில் 137 ரன்களை குவித்தார். அவர் ஒரு நாள் போட்டியில் குவித்த அதிக பட்ச ரன்னும் இதுதான். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக உலக கோப்பையில் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்னும் இதுதான். நேற்றைய போட்டியில் மேன் ஆப் தி மேட்சாக தேர்ந்தெடுக்கப்பட்ட தவானுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து