முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் படிப்படியாக வெளியேறும்

ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

காபூல் - ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக உள்நாட்டு பாதுகாப்பு பணியில் இருந்து அமெரிக்கப் படைகள் படிப்படியாக வெளியேறும், இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா ஆலோசனை நடத்தி வருகிறார் என்று பென்டகனின் புதிய ராணுவ தலைவர் ஆஷ்டோன் கார்டர் காபூலில் கூறினார்.

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை செயலாளராக ஆஷ்டோன் கார்டர் கடந்த வாரம் பொறுப்பேற்றார். அதன்பிறகு, ஆப்கான் தலைநகர் காபூலுக்கு முதன்முறையாக பயணம் செய்தார். ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானியுடன் அவர் அமெரிக்க படைகள் விலகல் குறித்து பேச்சுவார்த்தை நட்ததினார். பின்னர் இது குறித்து ஆஷ்டோன் கார்டர் காபூலில் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானில் கடந்த 13 வருடங்களாக தலிபான்களுக்கு எதிராக நடைபெற்று வரும் தாக்குதலில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் உள்நாட்டு பாதுகாப்பு பொறுப்பை மேற்கொண்டன. கடந்த ஆண்டு இறுதியில் பெரும்பாலான நேட்டோ படைகள் விலக்கி கொள்ளப்பட்டன. தற்போது ஆப்கானின் உள்நாட்டு பாதுகாப்பு பொறுப்பை ராணுவமும் போலீசாரும் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு உறுதுணையாக 10 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இருந்து வருகின்றனர்.

கடந்த 2014ம் ஆண்டு ஆப்கான் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 22 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவி காலம் முடிவதற்கு முன், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை விலக்கிக் கொள்வது குறித்து வாஷிங்டனில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து 5,500 அமெரிக்க வீரர்கள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படுவர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொளவதில் ஏற்கெனவே தாமதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து