முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்பதிவு இல்லாமல் பயணம் செய்ய புதிய ரயில்கள்

ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி - சாதாரண மக்கள் பயன் அடையும் வகையில் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்யும் ரயில்கள் பற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகிறது.

தற்போது நாடு முழுவதும் ரயில்களில் முன்பதிவு செய்தால்தான் சவுகரியமாக பயணம் செய்ய முடியும். முன்பதிவு பெட்டிகள் அதிகளவு ஒதுக்கப்படுகின்றன. முன்பதிவு செய்யாத பெட்டிகள் குறைந்த அளவே ஒதுக்கப்படுவதால் சாதாரண மக்கள் உடனடி பயணம் மேற்கொள்ளும் போது நெரிசலில் சிக்கி உட்கார கூட இடம் இல்லாமல் பயணம் செய்யும் நிலை உள்ளது.

இதை தொடர்ந்து சாதாரண மக்களும் உடனடி பயணத்தை சவுகரியமாகவும், நெரிசல் இன்றியும் மேற்கொள்ள வசதியாக முழுக்க முழுக்க முன்பதிவு செய்யப்படாத ரயில்களை அதிகம் விட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஒரு சில வழித்தடத்தில் பண்டிகை காலத்தில் மட்டும் இது போன்ற முன்பதிவு இல்லாத பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் ஜன்சதரன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அது கைவிடப்பட்டது.

தற்போது ஜன்சதரன் எக்ஸ்பிரஸ் ரயில்களை அதிகளவில் மக்கள் பயணம் செய்யும் வழித்தடங்களில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி அடுத்த வாரம் தாக்கலாகும் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது. இது தவிர இந்த ஆண்டு 100க்கும் குறையாமல் புதிய ரயில்கள் விடப்படும் என்று தெரிகிறது. ஒவ்வொரு வருடமும் ரயில்வே பட்ஜெட்டில் 100க்கும் மேற்பட்ட ரயில்களை விடுவதற்கான அறிவிப்பு வெளியாகும்.

கடந்த பட்ஜெட்டில் 160 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டது. எனவே இந்த பட்ஜெட்டிலும் 150 முதல் 180வரை புதிய ரயில்கள் விடுவது பற்றி மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து