முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் வென்றோம்: டோனி

திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

தென் ஆப்பிரிக்கா சிறந்த அணிகளில் ஒன்றாகும். அந்த அணிக்கு எதிராக நாங்கள் அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறையிலும் நன்றாக செயல்பட்டோம். வேகப்பந்து வீரர்கள் திட்டமிட்டு வீசினார்கள், தேவையில்லாத வகையில் வீசாமல் நேர்த்தியுடன் வீசினர்.

இதேபோல் 2 ரன் அவுட் செய்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது. வேகப்பந்து வீரர்களான மொகித் சர்மாவும், உமேஷ் யாதவும் தூரத்தில் இருந்து பந்தை சரியாக ஏரிந்தார்கள். தவானின் பேட்டிங் மிகவும் அற்புதமாக இருந்தது. அவர் திட்டமிட்டு விளையாடினார். சதம் அடித்த பிறகும் அவர் கூடுதல் ரன்களை எடுத்து மிகவும் முக்கியமானது.

பயிற்சியில் அவர் நன்றாக பேட்டிங் செய்தார். அது அவருக்கு உதவியாக இருந்தது. டாஸ் வென்றது மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் ஆடுகளத்தில் சிறிது மாற்றம் ஏற்பட்டது. மின்னொளியில் பந்தை சுவிங் செய்ய முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து