முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கி., ஸ்காட்லாந்தை 119 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது

திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

கிறைஸ்ட்ஸ்சர்ச் - கட்டாயமாக வென்றேயாக வேண்டிய கட்டாயத்தில் நேற்று ஸ்காட்லாந்தை எதிர்கொண்ட இங்கிலாந்து மொயீன் அலியின் சதம் உதவியுடன் 303 ரன்களை குவித்தது 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலக கோப்பையின், குரூப் ஏ பிரிவிலுள்ள இங்கிலாந்தும், ஸ்காட்லாந்தும் கிறைஸ்ட்ச் சர்ச் மைதானத்தில் நேற்று மோதின. டாசில் வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. இங்கிலாந்து தொடக்க வீரர் மொயீன் இயான் பெல் 54 ரன்களும், மொயீன் அலி 128 ரன்களும் குவித்து நல்ல தொடக்கம் தந்தனர். ஆனால் கேரி பேலன்ஸ் 10, ஜோ ரூட் 1 ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இருப்பினும் கேப்டன் மோர்கன் தாக்குப்பிடித்து 46 ரன்கள் எடுத்தார். ஜேம்ஸ் டைலர் 17, ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), 24, கிறிஸ் வோக்ஸ் 1 ரன்கள் எடுத்தனர். 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 303 ரன்கள் எடுத்தது. ஸ்டீவன் ஃபின் 1 ரன்னுடனும், ஸ்டூவவர்ட் பிராட் ரன் ஏதும் எடுக்காமலும் இருந்தனர்.

30.1 ஓவரில் 172 ரன்களுக்குத்தான் முதல் விக்கெட் வீழ்ந்தபோதிலும், இங்கிலாந்தால் 303 ரன்கள்தான் எடுக்க முடிந்தது. ஸ்காட்லாந்து தரப்பில் ஜோஸ் தாவே அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற என்னத்துடன் கலமிறங்கிய ஸ்காட்லாந்தின் தொடக்க வீரர் மேச்லியோட் 4 ரன்களிலும், பிரெட்டி கோல்மேன் 7 ரன்களிலும், மேட் மாச்சன் 5 ரன்களஇலும் அவுட் ஆகினர். ஆண்டர்சன், வோக்ஸ், ஃபின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய ஸ்காட்லாந்து 42.2 ஓவர்களில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி கண்டது. இந்த அணியின் தொடக்க வீரர் குயெட்சர் மட்டுமே சிறப்பாக விளையாடி 84 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்தார். மற்றவீரர்கள் ஒருவரும் 30 ரன்களை எட்டவில்லை.

பேட்டிங்கில் அசத்திய மொயீன் அலி பிறகு பந்துவிச்சிலும் 10 ஓவர்களில் 47 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். 2015 உலகக் கோப்பையில் இங்கிலாந்து தனது முதல் போட்டியில் சிறந்த பார்மில் உள்ள ஆஸ்திரேலியாவிடம் மோதியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்தது.

ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நம்பிக்கையில் பீல்டிங் தேற்வு செய்த இங்கிலாந்து சிறிது நேரத்திலேயே களங்கியது. ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக் காரர் ஆரோன் பின்ச் அபார சதத்துடன் ஆஸ்திரேலியா 342 ரன்கள் குவித்து. இங்கிலாந்துக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது. அதை துறத்திய இங்கிலாந்து 41.5 ஓவர்களில் 231 ரன்களுக்கே அனைத்து விக்கெட்களையும் இழந்து படுதோல்வி அடைந்தது.

இங்கிலாந்து அணி தனது இரண்டாவது போட்டியில் நியூசிலாந்தை எதிர் கொண்டது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சவுத்தி பந்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 123 ரன்களுக்கு சுருண்டது. இந்த போட்டியில் டிம் சவுத்தி 7 விக்கெட்களை வீழ்த்தி சிறந்து விழங்கினார். அதைத் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 12.2 ஓவர்களிலேயே சேசிங் செய்து இங்கிலாந்துக்கு கடும் வீழ்ச்சியை கொடுத்தது.

பலம் வாய்ந்த அணிகளிடம் எளிதாக தோல்வி கண்டு கடும் நெருக்கடியில் இருந்த இங்கிலாந்து நேற்று நடைபெற்ற போட்டியில் சிறிது முன்னேறியுள்ளது. கத்துக்குட்டியான ஸ்காட்லாந்தை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து