முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 4 ஆண்டுகளில் கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது

திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - முந்தைய 5 ஆண்டு மைனாரிட்டி திமுக ஆட்சியில், கொலை வழக்குகள் 25.5 சதவீதம் அதிகரித்தது.என்றும், கடந்த நான்கு ஆண்டுகளில், கொலைகளின் எண்ணிக்கை சராசரியாக ஆண்டொன்றுக்கு 0.5 சதவீதம் குறைந்துள்ளது.  என்றும் முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் தெரிவி த்துள்ளார்.
 
சட்டசபையில் நேற்று சட்டசபையில்  முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம்   பேசியதாவது:,
 
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து பல்வேறு உறுப்பினர்கள்  பேசியுள்ளார்கள்.  தேசிய முற்போக்கு திராவிட கழக உறுப்பினர் .பார்த்திபன் 18.2.2015 அன்று, இங்கே சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து  பேசிய போது, நான் அதற்கு விரிவாக பதில் அளித்தேன். அந்த பதிலில்  பல்வேறு புள்ளி விவரங்களையும் தெரிவித்திருந்தேன்.  எனவே, அது பற்றி மீண்டும் இங்கே விவரிக்காமல், ஒன்றிரண்டு புள்ளி விவரங்களை மட்டும் எடுத்துக் கூற விரும்புகிறேன்.
 
முந்தைய 5 ஆண்டு மைனாரிட்டி திமுக ஆட்சியில், கொலை வழக்குகள் 25.5 சதவீதம் அதிகரித்தது.  அதாவது, ஆண்டொன்றுக்கு சராசரியாக 5.1  சதவீதம் அதிகரித்தது.  ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில், கொலைகளின் எண்ணிக்கை சராசரியாக ஆண்டொன்றுக்கு 0.5 சதவீதம் குறைந்துள்ளது.  அதே போன்று ஆதாயக் கொலைகள் கடந்த நான்கு ஆண்டுகளில் 4.3 சதவீதம் குறைந்துள்ளது.  ஆனால், முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியின் போது, சராசரியாக ஆண்டொன்றுக்கு 21.4 சதவீதம் அதிகரித்தது.  முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் கூட்டுக் கொள்ளை வழக்குகள் ஆண்டொன்றுக்கு சராசரியாக 3.3 சதவீதம் உயர்ந்து வந்தன. ஆனால் தற்போது இந்த வழக்குகளில் எதுவும் அதிகரிக்கவில்லை. 

கொள்ளை வழக்குகளைப் பொறுத்தவரை அஇஅதிமுக ஆட்சியில் 2011 ஆம் ஆண்டு முதல், ஆண்டொன்றுக்கு, சராசரியாக 1.6 சதவீதம் குறைந்துள்ளது.  ஆனால் முந்தைய மைனாரிட்டி திமுக   ஆட்சியில், கொள்ளை வழக்குகள் சராசரியாக ஆண்டொன்றுக்கு 63.2 சதவீதம் அதிகரித்து வந்தது.  அது போலவே, முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில், கன்னக் களவு வழக்குகள், ஒவ்வொரு வருடமும் 5.2 சதவீதம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது அவை 2.9 சதவீதம் அளவிற்கு மட்டுமே அதிகரித்துள்ளது.  களவு வழக்குகளை  2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, அவை தற்போது 17.9 சதவீதம் குறைந்துள்ளன. சராசரியாக ஆண்டொன்றுக்கு 4.5 சதவீதம்   குறைந்து வருகிறது.
இந்த புள்ளி விவரங்கள், மாநிலத்தில் குற்றங்கள் குறைந்து வருவதோடு, சட்டம் ஒழுங்கு தொடர்ந்து பாதுகாக்கப்படுகிறது என்பதை தெளிவாக்கும். !இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து