முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்

திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை - மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோயில் தெப்பத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
இக்கோயிலின் மாசி தெப்போற்சவ விழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. கொடிமரத்தின் முன்பு அருள்மிகு வியூக சுந்தரராஜ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

சிறப்பு பூஜைகளை தொடர்ந்து கொடிமரத்தில் விழா கொடியேற்றப்பட்டது. இதில் கோயில் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான அனிதா, கண்காணிப்பாளர் அய்யர் சிவமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு தினமும் மாலையில் சுவாமி, அம்மனுடன் மாடவீதிகளில் வலம் வந்து அருள் பாலிக்கிறார். மார்ச் மாதம் 3ம் தேதி டவுன்ஹால் சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும். தற்போது அந்த தெப்பத்தில் தண்ணீர் இல்லாததால் மார்ச் மாதம் 4ம் தேதி இரவு நிலைத் தெப்பமாக நிகழ்ச்சி நடைபெறும். தெப்பத்தை சுவாமி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து