முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பையில் இரட்டை சதமடித்த முதல் வீரர் கெய்ல்

செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

கான்பெரா: பிப்.25உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இரட்டை சதமடித்த முதலாவது வீரர் என்ற சரித்திரத்தைப் படைத்துள்ளார் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல் 147 பந்துகளை எதிர்கொண்டு 215 ரன்களைக் குவித்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 1996ஆம் ஆண்டு ராவல்பிண்டியில் நடைபெற்ற ஆட்டத்தில் ன்னாப்பிரிக்காவின் கிறிஸ்டென், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக 188 ரன்கள் குவித்ததுதான் அதிகபட்ச ரன்களாக இருந்து வந்தது.

அதற்கு முன்னர் 1987ஆம் ஆண்டு கராச்சியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் விவியன் ரிச்சர்ஸ்ட் 181 ரன்கள் எடுத்தது சாதனையாக இருந்தது.இந்த சாதனைகளை முறியடித்துள்ளார் கெய்ல். ஜிம்பாம்ப்வேவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 215 ரன்கள் குவித்து உலகக் கோப்பை வரலாற்றில் இரட்டைச் சதமடித்த முதலாவது வீரர் என்ற சரித்திரத்தைப் படைத்திருக்கிறார் கிறிஸ் கெய்ல். இதில் 16 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் அடங்கும்.

அத்துடன் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 372 ரன்களைக் குவித்த முதலாவது ஜோடி என்ற சாதனையையும் மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் -சாமுவேல்ஸ் ஜோடி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து