முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் பனிப்புயல்: 1300 விமானங்கள் ரத்து

செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

தல்லஸ் - அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட கடும் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 1300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் கடும் பனிப் புயல் வீசியது. இந்த புயலால் தல்லஸ் தெற்கு ஒக்லகோமா, மேற்கு அர்கன் சாஸ் ஆகிய பகுதிகளில் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடும் பனிப்பொழிவு நிலவியதுடன் காற்றும் பலமாக வீசியது. வீடுகள் மற்றும் சாலைகளில் பனி உறைந்து காணப்பட்டது வாகன ஒட்டிகள் மிகவும் அவதிக்கி உள்ளாகினர். ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டனர்.

கடும் குளிராலும், சாலை விபத்திகளிலும் சில நாட்களில் சுமார் 22 பேர் உயிரிழந்துள்ளனர். பனிப்புயலால் தல்லஸ் பன்னாட்டு விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இங்கிருந்து பல்வேறு நாட்டுக்குச் செல்லும் 1300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடும் பனிப் பொழிவால் ஆங்காங்கே மின் தடை ஏற்பட்டது. கடும் கிளிர் காரணமாக மக்கள் வீடுகளிலே முடங்கி கிடந்தனர்.

பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. பனிப்புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டெக்சாஸ் மாகாணத்தில் வடக்கு பகுதிகளில் பனிப் பொழிவு இன்னும் சில திங்களுக்கு தொடரும் எனவும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து