முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.சி.சி.ஐ. கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்றதற்கு கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி -  பி.சி.சி.ஐ. கூட்டத்தில் என். சீனிவாசன் கலந்து கொண்டதற்கு சுப்ரீம் கோர்ட்டு கடுமையாக கண்டித்துள்ளது.

6-வது ஐ.பி.எல். போட்டிகளின் போது பிக்ஸிங் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நீதிபதி முகுல் முட்கல் குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணை அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. இதன் மீதான விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கும் போது, சீனிவாசன் ஐ.பி.எல். அணி அல்லது பி.சி.சி.ஐ. இரண்டில் ஏதாவது ஒன்றையே தேர்ந்தெடுக்க முடியும் என்று அறிவுறுத்தியிருந்தது.

மேலும் பி.சி.சி.ஐ.-ன் எந்த ஒரு பொறுப்பு வகிக்கவும் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் பிப்ரவரி 8-ந் தேதியன்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. செயற்குழுவுக்கு சீனிவாசன் தலைமை வகித்திருந்தார்.
சுப்ரீம் கோர்ட்டிலல்  நீதிபதிகள் தாக்குர் மற்றும் இப்ராகிம் கலிபுல்லா முன்னிலையில் ஐ.பி.எல். பிக்சிங் வழக்கு விசாரணைக்கு வந்த போது, சீனிவாசன் இதனைச் செய்திருக்கக் கூடாது. அவரது நடவடிக்கைகளில் முரண்பட்ட லாப நோக்குடைய இரட்டை நலன் இருக்கிறது என்பதை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இப்படியிருக்கையில் அவர் பி.சி.சி.ஐ. கூட்டத்தில் கலந்து கொள்வது எப்படி சரியாகும்?

சீனிவாசனின் இந்த நடவடிக்கை பற்றிய நிலைப்பாட்டை வழக்கறிஞர் கபில் சிபல் வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து