முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெரசா பற்றிய விமர்சனம்: பிரதமர் விளக்கம் அளிக்க கோரிக்கை

புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - அன்னை தெரசா பற்றி ஆர் எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறிய கருத்துக்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

ராஜஸ்தானில் நடைபெற்ற தொண்டு நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இங்கு அளிக்கப்படும் சேவை அன்னை தெரசா அளித்த சேவையை போன்றது அல்ல. அவரது சேவை நல்லதாக இருந்தாலும், அதன் நோக்கம் வேறு. மதம் மாற்றுவதே அவரது முக்கிய குறிக்கோள் என குறிப்பிட்டிருந்தார். இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் இப்பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. சிறந்த சேவையாற்றிய அன்னை தெரசாவை பற்றிய கருத்துக்கு நேற்று முன்தினம் மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மோகன் பகவத் மன்னிப்பு கேட்க  வேண்டும் என விலயுறுத்தினர். இந்நிலையில், மோகன் பகவத்தின் பேச்சுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரித்துள்ளனர்.
 
காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் மல்லிகார் ஜூன கார்கே கூறுகையில், மோகன் பகவத்தின் கருத்துக் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். கடந்த கூட்டத்தொடரில் பாஜ எம்பிக்கள் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு விளக்கம் எதுவும் அளிக்காமல் பிரதமர் மவுனம் சாதித்தார். இந்த முறை அவ்வாறு இருக்க கூடாது என்றார்.

மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், எம்பி சாக்ஷி மகராஜ் உள்ளிட்டோர் தெரிவித்த சர்ச்சைக் குரிய கருத்துக்கு பிரதமர் விளக்கம் அளிக்கவேண்டும் என குளிர் கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. பிரதமர் பதில் எதுவும் கூறாததால், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதோடு, அடிக்கடி வெளிநடப்பும் செய்தனர். இதனால் அவை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து