முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்போதைய சிறந்த பேட்ஸ்மேன் விராட்கோலியாம்

புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

பிரிஸ்பேன் - தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் சிறந்த வீரர் பேரி ரிச்சர்ட்ஸ், தற்போதைய கிரிக்கெட்டில் விராட் கோலி, ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆகியோரே சிறந்த பேட்ஸ்மென்கள் என்று கூறியுள்ளார்.

"தற்போதைய இந்திய பேட்டிங் வரிசையில் விராட் கோலி சிறந்த பேட்ஸ்மென் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அவர் உண்மையிலேயே திறமை வாய்ந்தவர். காசு கொடுத்து பார்க்க வேண்டுமென்றால் அது விராட் கோலியின் பேட்டிங்கையே.

ஏ.பி.டிவில்லியர்ஸ், விராட் கோலி ஆகியோர் இன்றைய கிரிக்கெட் உலகில் டாப் பேட்ஸ்மென்கள் என்பதில் சந்தேகமில்லை.” என்றார். பேரி ரிச்சர்ட்ஸ் பற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் மேதை சர் டான் பிராட்மேன் ஒரு முறை கூறியபோது, அப்போதைய டாப் வீரர்களான ஜேக் ஹாப்ஸ், லென் ஹட்டன் ஆகிய சிறந்த வலது கை பேட்ஸ்மென்களுடன் பேரி ரிச்சர்ட்சும் ஒப்பிடத் தகுந்தவர் என்றார்.

அஜிங்கிய ரஹானே, அல்லது ஷிகர் தவன் ஆகியோரது பேட்டிங்கையும் விராட் கோலியுடன் ஒப்பிட முடியுமா என்று கேட்ட போது, “முடியவே முடியாது, இவர்கள் இருவரும் கோலிக்கு அருகில் கூட இல்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous February 26, 12:57

    ஏம்பா குடும்பத்துல குழப்பத்த உண்டாக்குறீங்க

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து