முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முப்படைகளுக்கு தலமை வகிக்க ஒபாமாவுக்கு தகுதியில்லை

புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - அமெரிக்க முப்படைகளின் தலைவராக அதிபர் ஒபாமா அந்த பதவிக்கு தகுதியானவர் இல்லை என அந்த நாட்டின் லூசியானா மாகாண ஆளுனரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான பாபி ஜிண்டால் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் அமெரிக்க மாகாண ஆளுனர்கள் சங்க உறுப்பினர்களுடன் அதிபர் ஒபாமாவை சந்தித்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

அமெரிக்க முப்படை தலைமை பதவிக்கு அதிபர் ஒபாமா தகுதியானவர் இல்லை. இதனை கட்சி ரீதியிலோ, சித்தாந்த ரீதியிலோ கூறி நான் மகிழ்ச்சியடையவில்லை. அமெரிக்காவை ஒபாமா மிகவும் நேசிக்கிறார் என்பதில் ஐயமில்லை. ஆனால் நாட்டை அச்சுறுத்தும் மத அடிப்படைவாதத்தை இனம் கண்டுகொள்ளவோ, அதற்கு எதிராக நேரடி யுத்தம் நடத்தவோ அவர் தவறி விட்டார். எதிரிகளை இஸ்லாமிய அடிப்படைவாதம் பயங்கரவாதிகள் என்று அழைப்பதற்கு கூட அவர் தயங்குகிறார்.

அமெரிக்க தரைப்படையை அனுப்பி கொடூரம் நிறைந்த அந்த எதிரிகளை அழிப்பதற்கு பதிலாக ராணுவத்தினரின் பங்களிப்பை வெறும் பயிற்சியளிப்போடு நிறுத்தி விட்டார். வெற்றியை நோக்கி அமெரிக்க படைகளை வழிநடத்த ஒபாமா தவறி விட்டார் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து