முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் 25 கோவில்களை புனரமைக்க திட்டம்

புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை -தஞ்சை பிரகதீஸ்வரர், மாமல்லபுரம் கடற்கரை கோவில்கள் உட்பட நாடு முழுவதும் 25 கோவில்களை புனரமைக்க மத்திய தொல்லியல் துறை  திட்டமிட்டுள்ளது.

மத்திய தொல்லியல் துறை உயர் அதிகாரிகள் சென்னையில் கூறியதாவது:-

மத்திய அரசின் உத்தரவை ஏற்று மத்திய தொல்லியல் துறை நாடு முழுவதும் பழமையும், பாரம்பரியமும் கொண்ட 25 கோவில்களை தேர்வு செய்துள்ளது. இந்த கோவில்கள் 500 முதல் ஆயிரம் ஆண்டுகள் முற்பட்டவையாக உள்ளன.
இந்த கோவில்களை 5 ஆண்டுகளில் புனரமைத்து மீண்டும் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான ஆய்வுகள் நடந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தஞ்சாவூர் பெரிய கோவில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை கோவில் என 2 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில் மாமல்லபுரம் கோவில் பழமையான கோவில் கோபுரங்கள், கடற்கரை உப்பு காற்று மற்றும், காற்றில் உள்ள சிறு, சிறு மணல் துகள்களால் கோவில் கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் உள்ளிட்ட புராதன பொருட்கள் சேதமடைந்து வருகின்றன. ஒரு சில இடங்களில் பெரிய பள்ளமும் ஏற்பட்டுள்ளது.
 
இதனை இப்படியே விட்டுவிட்டால் அவை விரைவில் சிதிலமடைந்துவிடும் என்பதால் மத்திய அரசு தமிழகத்தில் உள்ள 2 கோவில்களை தேர்வு செய்துள்ளது. அந்தவகையில் நாடு முழுவதும் உள்ள 25 கோவில்களை புனரமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இதற்காக தற்போது ஆரம்ப கட்ட ஆய்வுகள் நடந்து வருகிறது.
 
இவற்றை புனரமைக்க ஆகும் செலவு, நேரம் ஆகியவை கணக்கிடப்பட்டு வருகிறது. அத்துடன் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள 11 ஏக்கர் பரப்பளவிலான அகழியை மாநில அரசு மத்திய தொல்லியல் துறை வசம் ஒப்படைத்துள்ளது. உடைந்து கிடக்கும் அகழி மதில் சுவர்கள் சீரமைக்கப்பட உள்ளது. இதற்கு தேவைப்படும் நிதியும் கணக்கிடப்பட்டு வருகிறது.

அதேபோல் மாமல்லபுரம் கடற்கரை கோவிலை கடல் காற்றில் இருந்து பாதுகாக்க கோவில் கோபுரங்களில் கெமிக்கல் வர்ணம்பூசுவது குறித்தும், கோவிலின் கிழக்கு பகுதியில் சவுக்கு மரம் நடவும் ஆலோசனை நடந்து வருகிறது. முதல்கட்டமாக மத்திய அரசு செயலாளர் மற்றும் மத்திய தொல்லியல் துறையின் தமிழக உயர் அதிகாரிகளும் சேர்ந்து ஆய்வு பணியை தொடங்கி உள்ளனர்.

பண்டைய வரலாறுகள், கலாசாரத்தை அறிந்து கொள்வதற்காக அகழ் ஆராய்ச்சியிலும் மத்திய தொல்லியல் துறை ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நடத்திய அகழ் ஆராய்ச்சியில் ‘முதுமக்கள் தாழி‘ கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அப்பகுதியில் கண்டெடுக்கப்பகட்ட எலும்புகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இதன் மூலம் பண்டைய வரலாறுகளும் தெரியவரும். இந்த தகவல்களை புத்தக வடிவில் கொண்டுவருவதற்காக மத்திய தொல்லியல் துறையின் நிதி மூலம், அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோல் மாமல்லபுரம் அருகே சால்வான்குப்பம் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட அகழ் ஆராய்ச்சியின் போது 8 அடி ஆழத்தில் புதைந்திருந்த முருகன் கோவில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையும் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தமிழகத்தில் வேளாங்கண்ணி மற்றும் காஞ்சீபுரத்தை பாரம்பரிய நகரமாக அறிவித்துள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

அதேபோல் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோட்டைகள், கட்டிடங்கள் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள 450 இடங்கள் தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு தொல்லியல் துறை அதிகாரிகள் கூறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து