முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டணச்சுமை இல்லாத பட்ஜெட்: ஜெயலலிதா வரவேற்பு

வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - பொது மக்களுக்கு  எந்த வித பாதிப்பும் சுமையும் இல்லாமல் தொலை நோக்கு திட்டத்துடன் இந்திய ரயில்வே நடை போடுவது வரவேற்கத்தக்கது என்றும்;பயணிகளுக்கு கட்டணச்சுமை இல்லாத பட்ஜெட் என்றும் மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டுக்கு மக்களின் முதல்வரும் அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது மக்களின் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டஅறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, முதல் முறையாக முழுமையான 2015 ஆம் ஆண்டுக்காக ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது அனைத்துத்தரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளது. முந்தையஐக்கிய முற்போக்கு கூட்டணியின்   தவறான நிர்வாகத்தால் முக்கிய துறையான ரயில்வே துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு சீரமைக்க புதிய அரசு முற்பட்டுள்ளது.

சாதாரண மக்கள் பயன்படுத்தும் பயணிகள் கட்டணங்களை உயர்த்தாதது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நிதியாண்டில் ரயில்வே துறையின் மேம்பாட்டுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. பயணிகள் பாதுகாப்பு,குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு,ரயில்வே தூய்மை  மற்றும் சுற்றுச்சூழலுக்கு ரயில்வே அமைச்சர் முன்னுரிமை வழங்கியுள்ளார். தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்தி உள்ளது.தேவையானதும் வரவேற்கத்தக்க அம்சங்களாகும். குறைந்த விலையில் மின்சாரம் வாங்க  திட்டமிட்டுள்ளதும் பயணிகள் சுமையை குறைக்கும் மத்திய அரசு, மாநில அரசுகளுடன் ஆலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்வதும் சிறந்ததாகும்.

அதிவேக விரைவு ரயில் இயக்கப்படுவதாக அறிவித்திருப்பது வரவேற்கிறேன். அதில் சென்னை மாநகருக்கும் முன்னுரிமை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதிமேலாண்மை நிறுவனம் அமைக்கப்பட்டிருப்பது போல ரயில்வே துறையும் அமைக்க முன்வந்துள்ளது, அதன் நிதி தேவையை பூர்த்தி செய்வதாக அமையும். 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூர புதிய ரயில் பாதையை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு 2015 ஆம் ஆண்டில்ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூர ரயில் பாதை அமைக்க 8 ஆயிரத்து 656 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 800 மீட்டர் அகல பாதை அமைத்திடவும். 9 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் ரயில் பாதையை விரிவுப்படுத்தவும் 96 ஆயிரத்து 182 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதிய திட்டம் ஏதுமில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம் பற்றியும் குறிப்பிடப்படவில்லை.தமிழ்நாட்டில் பத்து முக்கிய ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும். நிலுவையில்  உள்ள 22 திட்டங்களுக்கும் புதிய ரயில் திட்டங்களுக்கும் தமிழகத்திற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.

வளர்ந்து வரும் மிகப்பெரிய மாநிலமான தமிழகத்திற்கு சில முக்கிய திட்டங்களை நிறைவேற்றித்தருமாறு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை கேட்டுக்கொள்கிறேன், அதில் சென்னை –தூத்துக்குடி இடையே  சரக்கு பெட்டக போக்குவரத்து, சென்னை மதுரை, கன்னியாக்குமரி  மற்றும் கோவை மதுரை,கன்னியாகுமரி அதிவேக விரைவு ரயில் திட்டங்களை  நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழக தொலை நோக்கு திட்டம் -2023 ஐ நிறைவேற்றும் வகையில் இந்த திட்டங்களை விரைவில் நிறைவேற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த முறை நான் பிரதமரை சந்தித்த போது கொடுத்த மனுவில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு வழங்கும்படி கேட்டுக்கொண்டேன். ஆனால் இந்த ரயில்வே பட்ஜெட்டில் அதுப்பற்றி எதுவும் அறிவிப்பு இல்லை. அதற்கான நிதியை வேகமாக ஒதுக்கி பணிகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அடுத்த ஐந்தாண்டுகளில் ரயில்வே திட்டங்களை செயல்படுத்த 8. 5 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய ரயில்வே அமைச்சர்களால்  கடந்த சில ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை.

அந்த பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் அந்த திட்டப்பணிகளை செயல்படுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.பட்ஜெட்டில் புதிய ரயில்கள் அறிவிக்கப்படாதது, ஏமாற்றமளிக்கிறது. இனி வரும் காலத்தில் புதிய ரயில்கள் அறிவிக்கப்படும் என்று பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள். ஒட்டுமொத்தமாக மத்திய அரசும் ரயில்வே அமைச்சரும் தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட், அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளது. பொது மக்களுக்கு  எந்த வித பாதிப்பும் சுமையும் இல்லாமல் தொலை நோக்கு திட்டத்துடன் இந்திய ரயில்வே நடை போடுவது வரவேற்கத்தக்கது
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  
 .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து