முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகளின் பிடியில் சித்ரவதையை அனுபவித்தேன்

வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழகப் பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம்குமார் நேற்று முன்தினம்   சென்னை திரும்பினார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள வாரியன் வயல் கிராமத்தை சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார்.

இவர் ஆப்கானிஸ்தானில் ஏசு சபையின் அகதிகள் சேவை திட்டத்தின் இயக்குனராக பணியாற்றினார். .இவர் ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு கல்வி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான மேலும் ஒரு கல்வி நிறுவனம் ஹெராத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள சோஹாதத் கிராமத்தில் இயங்கி வருகிறது.

அந்தக் கல்வி நிறுவனத்துக்கு சக ஆசிரியர்களுடன் பிரேம் குமார் சென்றிருந்தார். பின்னர், அங்கிருந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-ஆம் தேதி ஹெராத்துக்கு அவர் மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தபோது 6 தலிபான் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டார். மத்திய. மாநில அரசுகளின்தீவிர முயற்சியின் காரணமாக, சமீபத்தில் அவர் விடுவிக்கப்பட்டார். மீட்கப்பட்ட, தமிழக பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம் குமார், புதன்கிழமை சென்னை திரும்பினார்.

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம்குமார் மீட்கப்பட்டு, கடந்த, 23-ஆம் தேதி தில்லிக்கு அழைத்து வரப்பட்டார். இந்நிலையில், அவர் சென்னைக்கு  வந்தார். சென்னை லயோலா கல்லூரியில் பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் நேற்று நிருபர்களுக்கு உருக்கமாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மத்திய, மாநில அரசுகளின் முயற்சியாலும் கடவுளின் கிருபையாலும் நான் தலிபான் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுதலையானேன். கடந்த 8 மாதங்களாக தீவிரவாதிகள் என்னை துப்பாக்கி முனையில் சிறை வைத்திருந்தனர். அடிக்கடி அவர்கள் என்னை இடம் மாற்றிக் கொண்டே இருந்தனர்.

என்னை துப்பாக்கி முனையில் வைத்திருந்ததோடு சங்கிலியால் பிணைத்து 5 பூட்டுகளை போட்டு பூட்டி இருந்தனர். ஆனால் அவர்கள் என்னை பட்டினி போடவில்லை. நான் அங்கு அப்பாவி தலிபான் மக்களுக்கு கல்வியறிவு புகட்டுவதற்காகத்தான் சென்றிருந்தேன். மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபடவில்லை. அவர்கள் என்ன நோக்கத்திற்காக என்னை கடத்தினார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

என்னை மீட்பதற்கு 20 லட்சம் டாலர் கொடுக்கப்பட்டதா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அங்குள்ள இந்திய தூதரக அதிகாரி என்னை மீட்டு அவரது ஆடையை எனக்கு கொடுத்து என்னை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.என்னை மீட்டு வந்ததற்காக பிரதமர் மோடி, மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து