முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

400 கிறிஸ்தவர்களை கடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள்

வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

பெய்ரூட் - ஈராக், சிரியாவில் உள்ள பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ். தீவிரவாதிகள் இஸ்லாமிய தேசம் என்ற நாட்டை உருவாக்கி உள்ளனர். அவர்கள் மாற்று மதத்தினரையும், ஷியா பிரிவு முஸ்லீம்களையும் கொன்று குவித்து வருகிறார்கள்.
சிரியா மற்றும் ஈராக் எல்லையில் உள்ள சில பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி வைத்திருந்தனர். அந்த இடத்தை மீட்பதற்கு குர்தீஸ் படைகள் தாக்குதல் நடத்தியது. அங்கிருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் விரட்டப்பட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்குள்ள ஹசாக்கான் பகுதிக்குள் புகுந்து அப்பாவி மக்களை கடத்தி சென்றனர். ஹசாக்கான் பகுதியில் அசிரியன் பிரிவை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுடைய கிராமத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் ஏராளமான கிறிஸ்தவர்களை கடத்தி சென்றுள்ளனர். 100க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கடத்தி செல்லப்பட்டதாக சிரியா அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் அசிரிய மத தலைவர் சினோ கேபிரியல் கூறும் போது, 400க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களை கடத்தி சென்றுள்ளனர். அவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகம். கடத்தப்பட்டவர்களில் பலரை தீவிரவாதிகள் அழைத்து சென்ற போது வழியில் சுட்டு கொன்று விட்டனர். மற்றவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. 12 கிராமங்களில் உள்ள கிறிஸ்தவர்களை கடத்தி சென்றுள்ளனர் என்று கூறினார்.

தீவிரவாதிகள் கிராமங்களுக்குள் புகுந்த நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் தப்பியோடினார்கள். அவர்கள் தற்போது பக்கத்து நாடான லிபியாவுக்குள் செல்வதற்கு முயற்சித்து வருகிறார்கள். சிரியாவில் ஏற்கனவே உள்நாட்டு போர் நடந்ததை அடுத்து 30 ஆயிரம் அசிரிய கிறிஸ்தவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர்.

சிரியாவில் 12 லட்சம் கிறிஸ்தவர்கள் வசிக்கிறார்கள். கடந்த வாரம் லிபியாவில் வசித்து வந்த எகிப்து நாட்டை சேர்ந்த 21 கிறிஸ்தவர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொலை செய்தார்கள். அது போல தற்போது கடத்தப்பட்டுள்ள கிறிஸ்தவர்களையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்யலாம் என பீதி நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து