முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் சட்டசபை தொடர் அடுத்த மாதம் 11-ல் தொடக்கம்

வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

பாட்னா - பீகார் மாநில சட்டப்பேரவை கூட்டத் தொடர் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்குகிறது. பீகார் மாநிலத்தில் புதிதாக பதவியேற்றுள்ள நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள அரசு அடுத்த மாதம் 11ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கான தேதி முடிவு செய்யப்பட்டது. இது குறித்து அமைச்சரவை முதன்மை செயலாளர் பிரதான் கூறுகையில்,

பீகார் மாநில சட்டசபை கூட்டத் தொடர் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்குகிறது. அப்போது இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் கவர்னர் கேசரிநாத் திரிபாதி உரையாற்றுகிறார். அன்றைய தினமே புதிய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். இந்த நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை மார்ச் மாதம் 12ம் தேதி தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 22ம் தேதி வரை சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும். இதில் 27 நாட்கள் அவை கூடுகிறது என்று பிரதான் தெரிவித்தார்.

முன்னதாக பீகார் மாநில முதல்வராக இருந்த ஜிதன்ராம் மாஞ்சிக்கும், ஐக்கிய ஜனதா தள தலைமைக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் விளைவாக கட்சியின் சட்டப்பேரவை தலைவராக நிதீஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து மாநிலத்தில் தனது தலைமையில் புதிய ஆட்சியமைக்க நிதீஷ்குமார் கவர்னரிடம் உரிமை கோரினார். இதனால் மாஞ்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதையடுத்து மாஞ்சி அரசின் மீது மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதாக இருந்தது. அந்த நிலையில் வாக்கெடுப்பு தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு மாஞ்சி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து பீகாரின் புதிய முதல்வராக நிதீஷ்குமார் கடந்த 22ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து