முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆளில்லா ரயில் கேட்டுகளில் எச்சரிக்கை கருவிகள்

வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - ஆளில்லா ரயில்வே கேட்டுகளில் ரேடியோ மூலம் எச்சரிக்கை செய்யப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்துக்கள் இப்போது சர்வசாதாரணமாகி விட்டது. ரயில்கள் தடம் புரள்வதும் அடிக்கடி நிகழும் ஒன்றாகி விட்டது. குறிப்பாக ஆளில்லா ரயில்வே கேட்டுகளில் லாரிகள் மீது ரயில் மோதுவது, அல்லது வாகனங்கள் மீது ரயில் மோதுவது இவையெல்லாம் அடிக்கடி நடக்கும் ஒன்றாகி விட்டது. இதனால் பல உயிர்கள் பலியாகின்றன. இதை தடுக்க ரயில்வே அமைச்சர் தனது திட்டத்தை குறிப்பிட்டார். அதாவது ஆளில்லா ரயில் கேட்டுகளில் ரேடியோ மூலம் எச்சரிக்கை செய்யப்படும் என்று அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார்.

அது மட்டுமின்றி 3,400 ஆளில்லா ரயில் கேட்டுகள் அடுத்த ஆண்டிற்குள் மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார். ரயில்கள் தடம்புரள்வதை தடுக்க நவீன தண்டவாளங்கள் அமைப்பது பற்றியும் அவர் குறிப்பிட்டார். நான்கு நகரங்களில் ரயில் ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,

புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். துறைமுகங்கள் மற்றும் சுரங்கங்களை இணைக்கும் வகையில் புதிய ரயில் பாதைகள் நிறுவப்படும். 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதைகள் மின்மயமாக்கப்படும். அகமதாபாத் - மும்பை இடையே அதிவேக ரயில் விடப்படும். ரயில் பெட்டிகளில் தீப்பிடித்தால் அதை தெரிவிக்கும் வகையில் எச்சரிக்கை கருவி பொருத்தப்படும்.

பயணிகள் பாதுகாப்பு மிக முக்கியம். அதற்காக ரூ. 6,581 கோடி ஒதுக்கப்படும். விபத்துக்களை தவிர்ப்பதற்கான தொழில்நுட்பங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 9 வழித்தடங்களில் சரக்கு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும். ஒரே டிக்கெட்டில் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிக்கும் திட்டம் சென்னை, மும்பையில் அறிமுகப்படுத்தப்படும். மின் தேவையை குறைக்கும் சாதனங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். ரயில்வே துறைக்கு ஆயிரம் ஏக்கரில் சோலார் மின் திட்டம் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து