முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்களில் முன்பதிவு செய்ய கால அவகாசம் 120 நாட்களாக அதிகரிப்பு

வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - ரயில்களில் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 120 நாட்களாக அதிகரிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்தார். அதாவது, இந்த கால அவகாசம் மூன்று மாதத்தில் இருந்து நான்கு மாதமாக அதிகரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பட்ஜெட் உரையில் மேலும் கூறியதாவது,

முக்கிய ரயில் நிலையங்களில் வைபை வசதி ஏற்படுத்தி தரப்படும். எம்.பி.க்கள் தங்கள் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரயில்வே மேம்பாட்டிற்கு நிதி தர வேண்டும். கோபால் ரெட்டி, மோகன் ஆகிய எம்.பி.க்கள் தலா ரூ. ஒரு கோடி கொடுத்திருக்கிறார்கள். இதே போல் அனைவரும் முன்வர வேண்டும். அதிகமாக பயன்படுத்தப்படும் ரயில்களில் படுக்கை வசதி பெட்டிகள் அதிகரிக்கப்படும். ரூ. 96 ஆயிரம் கோடியில் 77 விரிவாக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும். இரட்டை பாதை, மின்மயமாக்கல் போன்ற 77 திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

800 கி.மீ. தூர மீட்டர் கேஜ் பாதை அகலப்பாதையாக மாற்றப்படும். நடப்பாண்டில் 1,200 கி.மீ தூரத்திற்கு புதிய ரயில்பாதை அமைக்கப்படும். ரயில்கள் உரிய நேரத்தில் புறப்படுவதற்கும், உரிய நேரத்தில் சென்றடைவதற்கும் உறுதி செய்யப்படும். தானியங்கி டிக்கெட் விற்பனை செய்யப்படும். முக்கிய நகரங்களில் செயற்கைக் கோள் ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். ஸ்மார்ட் போன் மூலம் பொது பெட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை செய்யப்படும். டெல்லி - கொல்கத்தா, டெல்லி - மும்பை இடையே மணிக்கு 200 கி.மீ வேகத்தில் ரயில்கள் விடப்படும். மெட்ரோ ரயில் வசதிகள் 120 கி.மீ. முதல் 200 கி.மீ வரை செய்யப்படும். விழியிழந்தோர் தங்கள் கோச் பற்றி தெரிந்து கொள்ள பிரெய்லி தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு ரயில் பெட்டி தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து