முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் காந்தியை கண்டுபிடிப்பவருக்கு பரிசு: போஸ்டரால் பரபரப்பு

வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

லக்னோ - நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில், காங்கிரஸ் கட்சித் துணை தலைவர் ராகுல் காந்தி விடுமுறை எடுத்தது கண்டனத்துக்கு உரியது. தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்று கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு மிகப்பெரிய பரிசு வழங்கப்படும் என்று உ.பி. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களை தேர்தலை தொடர்ந்து, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியடைந்தது. இத்தோல்விக்கு யார் காரணம், இந்தத் தோல்வியில் இருந்து எவ்வாறு மீள்வது என்பதை ஆலோசித்து தன்னை சுயபரிசோதனை கொள்ள வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல்காந்தி சில வாரங்களுக்கு விடுப்பில் செல்வதாக தகவல் வெளியானது. 

நாடாளுமன்றத்தில் நேற்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், அமேதி மற்றும் உ.பி. மாநில மக்களுக்கு தேவையான நிதியை பெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் ராகுல் காந்தி விடுப்பு எடுத்து சென்றுள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்பது யாருக்குமே தெரியவில்லை. அவரை இன்னும் 2 நாட்களுக்குள் கண்டுபிடித்து தகவல் கொடுப்பவருக்கு மிகப்பெரிய ரொக்க பரிசு வழங்கப்படும் என்று லக்னோ, அலகாபாத் மற்றும் அமேதி தொகுதிகளின் பல்வேறு பகுதிகளில் நேற்று போஸ்டர்கள் காணப்பட்டன. நேரு, இந்திரா காந்தி வாழ்ந்த ஆனந்த பவன் இல்லத்திலும் வாசலிலும் இந்த போஸ்டர்கள் காணப்பட்டன.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அமேதி கொகுதியின் வளர்ச்சிக்கு தேவையான நிதிகளை கேட்டு பெற்றிருக்க வேண்டும். ஆனால் ராகுல் விடுப்பு எடுத்து சென்றதால் அமேதி தொகுதி மக்களும் காங்கிரஸ் தொண்டர்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து