முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: பிரதமர் தாக்கு

வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - காங்கிரஸ் அரசின் தோல்வி திட்டம்தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் கடந்த 23ம் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி நேற்று சபையில் பேசினார்.

அப்போது அவர் காங்கிரஸ் அரசின் திட்டங்களை விமர்சித்தார். குறிப்பாக, காங்கிரஸ் அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் அந்த அரசின் ஒரு தோல்வி திட்டம் என்று பிரதமர் விமர்சித்தார். இருந்தாலும் இந்த திட்டத்தை தாம் மூடிவிட போவதில்லை என்று கூறிய அவர், அந்த தவறை தான் செய்யப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். ஏழைகளுக்கு உதவும் எல்லா திட்டங்களும் இத்திட்டத்துடன் சேர்க்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். நாட்டில் ஊழல் மலிந்து விட்டது என்று பேசிய அவர், ஒவ்வொருவரும் இணைந்து கைகோர்த்து ஊழலை ஒழிக்க பாடுபட வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பது மக்களின் கடமை என்று பேசிய அவர், தூய்மை தான் தற்போது நாட்டில் பிரச்சினையாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். தூய்மையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், தூய்மையாக இருந்தால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். அவர்களுக்கு மரியாதையும் கிடைக்கும் என்று தூய்மையையும் பெண்களையும் இணைத்து பேசினார்.

எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்த தூய்மை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு ஏழை குடிமகனும் ஒரு ஆண்டுக்கு மருத்துவ செலவுக்காக ரூ. 7 ஆயிரம் வரை செலவழிப்பதாக உலக வங்கி கூறுகிறது. இதை மனதில் கொண்டு அனைவரும் தூய்மை திட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும். தூய்மையால்தான் பெண்களுக்கு மரியாதையும் கிடைக்கும். இவ்வாறு பிரதமர் தனது நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து