முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வெளியுறவு செயலர் அடுத்த மாதம் பாக்., செல்கிறார்

வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015      இந்தியா
Image Unavailable

இஸ்லாமாபாத்  - இந்திய வெளியுறவு துறை செயலாளர் ஜெய்சங்கர் 2 நாள் அரசுமுறை பயணமாக அடுத்த மாதம் 3ம் தேதி பாகிஸ்தான் செல்கிறார். அவரது இந்த பயணத்தின் போது நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் இடம்பெற வேண்டிய விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக அந்நாட்டில் உள்ள இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் இந்த ஆலோசனையை ஒட்டி இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஸித் டெல்லியில் இருந்து புறப்பட்டு இஸ்லாமாபாத் சென்றடைந்தார்.

அங்கு பாகிஸ்தான் வெளியுறவு துறை செயலாளர் ஆய்சாஸ் சவுத்ரியை அப்துல் பாஸித் சந்தித்து பேசினார். இதே போல் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளியுறவு துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் ஆகியோரையும் அப்துல் பாஸித் சந்தித்து பேசவுள்ளார். இந்நிலையில் இந்திய வெளியுறவு துறை செயலாளர் ஜெய்சங்கர் வருகையின் போது அனைத்து பிரச்சினைகற் குறித்தும் விவாதிக்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் தஸ்லீம் அஸ்லாம் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் விவகாரம், நதி நீர் பிரச்சினைகள், வர்த்தக விவகாரங்கள் உள்ளிட்ட அனைத்தும் விவாதிக்கப்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.
 
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய வெளியுறவு துறை செயலாளர் பாகிஸ்தான் செல்வதாக இருந்தது. அப்போது இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஸித் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை சந்தித்து பேசியதால் அந்த பயணத்தை இந்தியா ரத்து செய்தது. இதையடுத்து கடந்த 13ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தொடர்பு கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க அழைப்பு விடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து