முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனிவாசனின் சொத்துக்கள் முடக்கம்

வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத் - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரான தொழிலதிபர் என். சீனிவாசன் ஆகியோருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் இருவருக்கும் சொந்தமான ரூ. 232 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

இது குறித்து அமலாக்க துறை வட்டாரங்கள் கூறுகையில்,

ஜெகன்மோகன் ரெட்டி, சீனிவாசன் ஆகியோர் கார்மெல் ஆசியோ ஹோல்டிங்ஸ், ஜெகதி பப்ளிகேஷன்ஸ், பாரதி சிமிண்ட், இந்தியா சிமிண்ட்ஸ் போன்ற தங்களது நிறுவனங்களை பயன்படுத்தி முதலீடு என்ற பெயரில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி, சீனிவாசன் ஆகியோருக்கு சொந்தமான ரூ. 232 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 
கருப்பு பணத் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர மாநில அரசு துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள், தொழிலதிபர்கள் ஆகியோருக்கு சொந்தமான ரூ. ஆயிரம் கோடி மதிப்புடைய சொத்துக்களை அமலாக்க துறை ஏற்கனவே முடக்கி உள்ளது. இந்த முறைகேடு வழக்கில் சிபிஐ 2013ம் ஆண்டு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனம், ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான நிறுவனங்களில் ரூ. 140 கோடி முதலீடு செய்தது. அதற்கு பிரதிபலனாக ஜெகனின் தந்தை ராஜசேகர் ரெட்டி ஆந்திர முதல்வராக இருந்த போது அந்த மாநில அரசிடம் இருந்து நிலங்களையும் கிருஷ்ணா, கக்னா ஆகிய நதிகளில் இருந்து நீரையும் இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனம் முறையற்ற வழியில் பெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து