முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுக்கு வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - இலங்கை செல்லும் பிரதமர் மோடி , அங்கு அந்நாட்டின் அதிபர் சிறிசேனாவுடன் பேச்சுவார்த்தை தமிழக மீனவர் மீதான நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் இராஜபக்சே அரசு வீழ்த்தப்பட்ட பிறகு தமிழக மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு பரப்புரைகள் செய்யப்பட்டன. ஆனால், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்வது வருத்தமளிக்கிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய அறிவுறுத்துவதுடன், இனியும் இத்தகைய போக்கு தொடர்ந்தால் இரு தரப்பு உறவு பாதிக்கப்படும் என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும்.

அடுத்த மாதம் இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர்  சிறிசேனாவை சந்திக்கும் போது, மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் விபரீத விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து