முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

39 லட்சம் விவசாயிகளுக்கு 16 ஆயிரம் கோடி பயிர்க்கடன்

வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - கடந்த மூன்றரை ஆண்டுகளில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க 39 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.16,ஆயிரத்து 798.19 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.  \மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் நேற்று காலை, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்ட அரங்கில், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியதாவது:

அம்மா  வழிகாட்டுதலின்படியான அரசு கடந்த மூன்றரை ஆண்டுகளில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க 39 லட்சத்து 8 ஆயிரத்து 783 விவசாயிகளுக்கு ரூ.16, ஆயிரத்து 798. கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. உரிய காலத்தில் பயிர்க்கடன்களை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக 7 சதவிகிதம் வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் (2014-15) கூட்டுறவின் மூலம் ரூ.5000 கோடி குறியீடு நிர்ணயிக்கப்பட்டதில், 22.2.2015 வரை 9,25,425 நபர்களுக்கு ரூ.4,732.17 கோடி அளவிற்கு பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது.

6,61,668 ஆதிதிராவிட பழங்குடியினருக்கு ரூ.2,447.09 கோடி அளவிற்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. 7,54,882 புதிய உறுப்பினர்களுக்கு ரூ.3,130.68 கோடி பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. 24,40,566 சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.10,062.04 கோடி பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. அறுவடை காலங்களில் விளைபொருள்களின் விலை மிகக் குறைவாக இருக்கின்ற நிலையில், விவசாயிகள் அவற்றை இருப்பு வைத்து எதிர்காலத்தில் இலாபகரமான விலை கிடைக்கின்ற பொழுது விற்றுப் பயனடையும் வகையில் 2011-12ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 3,317 கிடங்குகள் கிராமப்புற கூட்டுறவுச் சங்கங்களில் கட்டப்பட்டுள்ளன. மேலும் விவசாயிகள் இருப்பு வைத்துள்ள விளைபொருள்களுக்கு கடந்த மூன்றரை ஆண்டுகளில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் ரூ.865.00 கோடி தானிய ஈட்டுக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் பயிர்க் கடன், நகைக் கடன் உள்ளிட்ட இதர வகையான கடன்களை விவசாயிகளுக்கு அவர்கள் கேட்டவுடன் தாமதமின்றி உடனுக்குடன் வழங்க வேண்டும் என்றும், எந்தவிதப் புகாருக்கும் இடம் கொடுக்காவண்ணம் மாதாமாதம் ஆய்வுப் பணி மேற்கொள்ள வேண்டும் என்று உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் குறைந்த விலையில் உரம் தங்குதடையின்றி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில், நடப்பாண்டில் 31.1.2015 வரை 12,15,916 விவசாயிகளுக்கு 4,83,577.970 மெட்ரிக் டன் அளவிற்கு உரம் விற்பனை செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.774.31 கோடி ஆகும்.

மேலும், அனைத்து வகையான உரம் மற்றும் விதை போன்றவைகளை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வேளாண் பெருமக்களுக்குத் தேவையான அளவில் உரிய நேரத்தில் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென  அமைச்சர் செல்லூர் ராஜூ அலுவலர்களுக்கு ஆணையிட்டார்.
 
மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக உரிய காலத்தில்  கடனை திரும்ப செலுத்துபவர்களுக்கு வட்டியில்லாக் கடனாக கூட்டுறவு வங்கிகள் கடன் வசதி அளித்து வருகின்றன. கடந்த மூன்றரை ஆண்டுகளில் 24,354 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.82.25 கோடி அளவிற்கு வட்டியில்லாக் கடனாக பெற்றுள்ளார்கள்.
வெளிச்சந்தையில் காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் திறக்கப்பட்ட 58 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னை மாநகரில் இரண்டு  நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் இயங்கி வருகின்றன. 24.2.2015 வரையில் 62,32,025 கிலோ டன் காய்கறிகள்  ரூ.17.51  கோடிக்கு விற்பனை  செய்யப்பட்டுள்ளன.

பொதுவிநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கூட்டுறவு சங்கங்களும், கூட்டுறவு நிறுவனங்களும் பெரும் பங்காற்றி வருகின்றன. மேலும், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் அனைத்து நியாயவிலைக் கடைகளும், குறித்த நேரத்தில் திறக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து வேலை நாட்களிலும், அனைத்து பொருட்களையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யவேண்டும் என்றும், இதில் முறைகேடு ஏதேனும் இருப்பின் சம்மந்தப்பட்ட விற்பனையாளர் மற்றும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும், கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் கட்டுப்பாடற்ற பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக் கூடாது என்றும், அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதை களப்பணியாளர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் நியாயவிலைக் கடைகள் பழைய கட்டடமாகவும் சிதலமடைந்த நிலையில் இருந்தால் அதனைக் கண்டறிந்து உடனடியாக புதிய கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், நியாயவிலைக் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதால் நடப்பாண்டில் 91 நியாயவிலைக் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டப்படடுள்ளது என்பதை அமைச்சர் செல்லூர் ராஜூ மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.

ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை நிறைவு செய்யும் வகையில் அவர்களுக்கு அரசின் திட்டங்கள் அனைத்தையும் சீரிய முறையில் செயல்படுத்தி அனைவரும் பயன்பெற துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் முழு ஈடுபாட்டுடன் செயல்படுமாறும், கூட்டுறவுத்துறை அனைத்து செயல்பாட்டிலும் முதலிடம் வகிக்கத்தக்க வகையில் திட்டங்கள் வகுத்து திறம்பட செயலாற்றிடுமாறும்  அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ துறை அலுவலர்களிடம் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில், இக்கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலர் .முகம்மது நசீமுத்தின்,  கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்  ஜெயஸ்ரீ முரளிதரன், கூடுதல் பதிவாளர்கள் கே.இராஜேந்திரன், .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து