முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா? அரபு எமிரேட்சுடன் மோதல்

வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

பெர்த் - ஐக்கிய அரபு எமிரேட்சுடன் இந்தியா இன்று மோதுகிறது. ஏற்கெனவே இரண்டு வெற்றிகள் பெற்றுள்ள இந்திய அணி இதையும் வென்று ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் அந்த பிரிவில் உள்ளன.

டோனி தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவை 130 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை இன்று எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் வாகா மைதானத்தில் நடக்கிறது. இந்திய நேரப்படி மதியம் 12 மணி்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.
முன்னணி அணிகளை வீழ்த்தி இருந்த இந்திய அணி சற்று பலவீனமான ஐக்கிய அரபு எமிரேட்சை தோற்கடித்து ஹாட்ரிக் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.

பேட்டிங், பவுலிங், பீல்டிங்கில் சிறப்பாக இருக்கும் இந்திய அணியின் அதிரடியான ஆட்டம் இன்றும் தொடரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். அதே நேரத்தில் 2-வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் ஐக்கிய அரபு எமிரேட்சை சாதாரனமாக எடுத்துக் கொள்ளமுடியாது.பேட்டிங்கில் தவான், கோலி, ரகானே, நல்ல நிலையில் உள்ளனர். ரோகித் சர்மா, ஜடேஜா பேட்டிங்கில் நல்ல நிலைக்கு திரும்புவது அவசியமானதாகும். முகமது ஷமி, உமேஷ் யாதவ், மொகித் சர்மா, அஸ்வின் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் காயம் காரணமாக சமி ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் புதிய சாதனை படைக்க வாய்ப்பு இருக்கிறது. இதை பயன்படுத்தி புதிய சாதனைக்கு முயற்சிப்பார்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி ஜிம்பாப்வேக்கு எதிராக 285 ரன்குவித்து தோற்றது. அயர்லாந்து எதிராகவும் 278 ரன் குவித்து போராடியே தோற்றது. இதனால் அந்த அணி இந்தியாவுக்கு எதிராக கடுமையாக போராட முயற்சிக்கும். அந்த அணி வீரர் சைமான் அன்வர் அயர்லாந்துக்கு எதிராக சதம் அடித்து முத்திரை பதித்தார். இப்போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து