முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் ஐ.எஸ். இயக்கத்துக்கு தடை: ராஜ்நாத்

வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - உலக நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு, அதன் சார்பு அமைப்புகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். மற்றும் அதன் சார்பு பயங்கரவாத அமைப்புகள் இந்தியா போன்ற நாடுகளை சேர்ந்த இளைஞர்களுக்கு பயங்கரவாத பயிற்சி தருகின்றன. இத்தகைய இளைஞர்கள் நாடு திரும்பியதும் நாட்டின் பாதுகாப்புக்கு சவாலாக விளங்குகின்றனர். ஈராக் மற்றும் அதன் சுற்றுப்புற நாடுகளை சேர்ந்த இந்த அமைப்புகள் புனித போர் என்ற பெயரில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளை தூக்கியெறிந்து காலிபா அரசுகளை நிறுவுமாறு இளைஞர்களை தூண்டுகின்றனர்.

மேலும் அப்பாவி மக்களையும், பாதுகாப்பு படையினரையும் கொல்வதன் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளில் இந்த அமைப்புகள் ஈடுபடுகின்றன என்று மத்திய அரசு கருதுகிறது. எனவே ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு தடை செய்துள்ளது. அதன் ஆதரவு அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன. ஐ.நா. அட்டவணையின்படி கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதியே ஐ.எஸ். அதன் சார்பு அமைப்புகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டு விட்டன என்று ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

இந்தியாவில் ஐ.எஸ். ஆதரவு நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றன. 2014ம் ஆண்டு மே மாதத்தில் மும்பையை சேர்ந்த இளைஞர்கள் ஐ.எஸ். பயிற்சி பெறுவதற்காக சிரியாவுக்கு பயணம் மேற்கொண்டனர். அவர்களில் ஒருவர் மட்டுமே கடந்த ஆண்டு இறுதியில் திரும்பி வந்தார். மற்றவர்களின் நிலை குறித்து இதுவரை தெரியவில்லை. ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவான கட்டுரை தளத்தை இயக்கியதாக பெங்களூரை சேர்ந்த மென்பொருள் வல்லுனர் கடந்த டிசம்பரில் கைது செய்யப்பட்டார். ஐ.எஸ். அமைப்பில் இணைவதற்காக சிரியாவுக்கு செல்ல முயன்ற ஐதராபாத் இளைஞர் ஒருவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து