முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய கட்சி தொடங்குகிறார் மாஞ்சி

வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

பாட்னா - பீகாரில் கடந்த வாரம் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த மாஞ்சி புதிய அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார்.

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கடந்த மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து நிதீஷ்குமார் விலகினார். தனது ஆதரவாளரும், தலித் தலைவருமான ஜிதன்ராம் மாஞ்சியை முதல்வராக்கினார். முதல்வரான பின்னர் மாஞ்சி அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தினார். இதனால் அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்தது. பீகார் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் பொது தேர்தல் வரவிருக்கிறது. அந்த சமயத்தில் நிதீஷ்குமார் முதல்வராக இருப்பது நல்லது என கட்சி முடிவு செய்தது.

மாஞ்சியை ராஜினாமா செய்ய கட்சி மேலிடம் உத்தரவிட்டது. அவர் மறுத்து விட்டார். இதை தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். ஐக்கிய ஜனதா தள சட்டமன்ற கட்சி தலைவராக நிதீஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆதரவு அளித்தது. சுமார் 130 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக நிதீஷ்குமார் கவர்னரிடமும், ஜனாதிபதியிடமும் தெரிவித்தார். இதை தொடர்ந்து நம்பிக்கை வாக்கு கோர மாஞ்சிக்கு கவர்னர் உத்தரவிட்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு தினத்தன்று மாஞ்சி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின்னர் நிதீஷ்குமார் கடந்த வாரம் முதல்வர் பதவியேற்று கொண்டார்.
இந்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மாஞ்சி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இன்று பாட்னாவில் மிக பெரிய பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்துக்கு பின்னர் புதிய கட்சி தொடங்கும் அறிவிப்பை மாஞ்சி வெளியிடுவார் என்று அவருக்கு நெருக்கமான தலைவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து