முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - பாராளுமன்றத்தில் நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* நாடு முழுவதும் 6 கோடி கழிப்பறைகள் கட்டப்படும்.
* 2020ம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் ஒரு லட்சம் கி.மீ. தூரத்திற்கு புதிய சாலைகள்.
* 2022ல் இந்தியா உலகின் பணக்கார நாடாக இருக்க இலக்கு.
* வரும் நிதியாண்டில் மாநில அரசுகளுக்கு 5 லட்சம் கோடி நிதி.
* மாநிலங்களிடம் பெறும் வருவாயில் 62 சதவீதம் மாநிலங்களுக்கே வழங்கப்படும். 
* விவசாயிகளுக்கு மண் வளத்தை தெரிவிக்க அடையாள அட்டைகள்.
* வசதிபடைத்தவர்களுக்கு எரிவாயு மானியம் முற்றிலும் நிறுத்தப்படும்.
* ஆண்டுக்கு ரூ. 12 பிரீமியத்தில் விபத்து காப்பீடு.
* 2016ல் கூடங்குளம் 2வது அணு உலை அமைக்கப்படும்.
* தங்க பத்திரத் திட்டம் அறிமுகம்.
* விசா திட்டம் விரிவாக்கம்.
* தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை.
* கல்வி, மதிய உணவிற்கு ரூ. 68 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
* ராணுவ துறைக்கு ரூ. 2.46 லட்சம் கோடி ஒதுக்கீடு.
* கருப்பு பணத்தை பதுக்கினால் 10 ஆண்டு கடுங்காவல்.
* வெளிநாட்டு சொத்துக்களை மறைத்தால் 7 ஆண்டு சிறை.
* பினாமி பெயர்களில் சொத்து வாங்குவதை தடுக்க சட்டம்.
*  வருமான வரி வரம்பில் எந்த மாற்றமும் இல்லை.
* சொத்துவரி முற்றிலும் நீக்கம்.
* 22 வகையான பொருட்களுக்கு சுங்க  வரி நீக்கம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து