முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை தொடரில் முதல் முறையாக ஆல்-அவுட் ஆன ஆஸ்தி.,

சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

ஆக்லாந்து - கடந்த 4 உலக கோப்பைகளில் எந்த ஒரு போட்டியிலும் ஆல்-அவுட் ஆகாத ஆஸ்திரேலியா முதல் முறையாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

உலக கோப்பையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நாடு ஆஸ்திரேலியா. 1987ம் ஆண்டு முதன்முறையாக ஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்றது. 1992ல் பாகிஸ்தானும், 1996ல் இலங்கையும் உலக கோப்பை தொடரில் சாம்பியன் ஆகின.

1999ல் ஆஸ்திரேலியா மீண்டும் உலக கோப்பையை கைப்பற்றியது. இதன்பிறகு, 2003 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவே சாம்பியன் ஆனது. கடந்த 2011 உலக கோப்பையின்போது அரையிறுதிவரை வந்து இந்தியாவிடம் தோற்று வெளியேறியது ஆஸ்திரேலியா.

1999 முதல் 2011 உலக கோப்பை அரையிறுதி வரை ஆஸ்திரேலியா 27 போட்டிகளில் ஆடியுள்ளது. ஆனால் எந்த போட்டியிலுமே ஆல்-அவுட் ஆகவில்லை. 200 ரன்களுக்கும் கீழே ரன்கள் எடுத்த போட்டிகளில் கூட அனைத்து விக்கெட்டுகளையும் எதிரணி கைப்பற்றவிட்டதில்லை ஆஸ்திரேலியா. குறைந்த ரன்கள் எடுத்தாலும், எதிரணியை அதற்கும் குறைவான ரன்களில் மடக்கிப்போட்டு வந்தது ஆஸ்திரேலியா.

ஆனால், நேற்று நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 151 ரன்களில் ஆஸ்திரேலியா ஆல்-அவுட் ஆகியுள்ளது. அதுவும் 32.2 ஓவர்களிலேயே மூட்டை கட்டிவிட்டது ஆஸ்திரேலியா. அந்த அணிக்கு இது மிகப்பெரும் மனரீதியான பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. மேலும் உலக கோப்பையில் 1983க்கு பிறகு ஆஸ்திரேலியா எடுத்த மிக குறைந்த ஸ்கோர் இதுதான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து