முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளுக்கு ரூ.8.5 லட்சம் கோடி கடன்

சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - இந்த ஆண்டு ரூ.8.50 லட்சம் கோடி விவசாய கடன் வழங்கப்படும் எனவும், சரக்கு மற்றும் சேவைகள் வரி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. எனவே இதை இலக்காக வைத்து தொழில் துறையை ஊக்குவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் விவசாய துறையையும் ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுளஅளது. இதன்படி இந்த ஆண்டு ரூ.8.5 லட்சம் கோடி விவசாய கடன் வழஹ்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் விவசாயிகள் சிறப்பான பலன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்ற விவசாய பொருள் உற்பத்தியை அதிகரிக்க பாசன வசதி கொண்ட நிலப்பரப்புகள் அதிகரிக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல், சரக்கு மற்றும் சேவை வரியை 2016ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குள் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுளஅளது. நாட்டின் நிதி பறஅறாக்குறை குறைந்துளஅளது என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து