முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க பஞ்சாயத்து தலைவர் வெட்டி கொலை

சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

மதுரை - மதுரை அருகே அதிமுக பஞ்சாயத்து தலைவர் நேற்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கார்சேரி கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் கருப்பசாமி (62). இவர் அதிமுகவைச்சேர்ந்தவர். கார்சேரி பகுதியில் ஆக்கிரமிப்புக்களை அகற்றும் பணியில் கருப்பசாமி ஈடுபட்டுவந்தார். கார்சேரியில் பொது நடைபாதையில் கட்டப்பட்ட வீட்டை அகற்றுவது குறித்து சில நாட்களுக்கு முன் பிரச்சனை எழுந்தது.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து கடந்த 26 ம்தேதி கிராம அதிகாரி மற்றும் வருவாய் ஊழியர்கள் முன்னிலையில் அந்த வீடு அகற்றப்பட்டது. இதற்கு பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி தான் காரணம் என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் எண்ணினர்.

இதனால் கருப்பசாமியை தீர்த்துகட்டவும் முடிவு செய்தனர். நேற்று முன்தினம் கருப்பசாமியின் வீடு அருகே 6 பேர் கொண்ட கும்பல் பதிங்கியிருந்து அவர் வெளியே வந்ததும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டனர். அப்போது கருப்பசாமியின் மகன் வீரமணியையும் அந்த கும்பல் கொலை செய்ய முயன்றது. இதில் பலத்த காயத்துடன்  உயிருக்கு போராடிய கருப்பசாமி மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் .

நேற்று அதிகாலை சிகிச்சை பலன்இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் சிலைமான் போலீசார் விரைந்து சென்று கருப்பசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை நடத்தினர். அப்போது கருப்பசாமியின் உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் திரண்டு கொலையாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என்று மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீஸ் அதிகாரிகள் விரைந்து கொலையாளிகளை விரைவில் கைதுசெய்வோம் என உறுதியளித்தை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

இது குறித்து சிலைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலையில் திமுகவை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனியசாமி உள்ளிட்ட 10 பேர் ஈடுபட்டிருப்பதாக போலீசார் சந்தேகப்பட்டு அந்த 10 பேரையும் தேடி வருகிறார்கள். தற்போது கார்சேரியில் தொடர்ந்து பதற்றம் நிலவுதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து