முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2.50 லட்சம் கிராமங்களில் இணையதள வசதி

ஞாயிற்றுக்கிழமை, 1 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - பாஜக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் அவர் மேலும் கூறியதாவது,

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 2.50 லட்சம் கிராமங்களுக்கு இணையதள வசதி செய்து தரப்படும். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதியோர் பென்சன் திட்டம் உருவாக்கப்படும். இதற்காக அரசின் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும். ஏழ்மையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உதவ சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

உரிமை கோரப்படாத பி.எப். பணம் ரூ. 9 ஆயிரம் கோடி முதியோர் நலனுக்கு பயன்படுத்தப்படும். முதியோர் பென்சனுக்கான பிரீமிய தொகையில் பாதியை அரசு ஏற்கும். 18 முதல் 50 வயதிற்குட்பட்டோருக்கு ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 330 பிரீமியத்தில் ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்கப்படும். பிரதமர் ஜீவன் ஜோதி யோஜனா மூலம் ஆண்டுக்கு ரூ. 330 பிரீமியத்தில் விபத்து மரணத்துக்கு இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு அருண்ஜெட்லி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

அனைத்து கிராமங்களிலும் தொலைதொடர்பு வசதி

மத்திய பட்ஜெட் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர், இது ஒரு முன்னேற்றம் தரும் பட்ஜெட் என்று கூறியுள்ளார். இந்த பட்ஜெட்டில் வார்த்தை ஜாலமே உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் அருண்ஜெட்லி தனது பட்ஜெட் உரையில், வட கிழக்கு மாநிலங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளன. அவற்றை மேம்படுத்த வேண்டும். நாட்டில் அனைத்து கிராமங்களிலும் தொலைதொடர்பு வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து