முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பட்ஜெட்: தலைவர்கள் கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 1 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - சென்னை: பட்ஜெட் குறித்து தமிழக தலைவர்கள் கருத்துத்தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி

பட்ஜெட்டில் உள்ள திட்டங்களின் செயல்பாட்டை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தமிழகத்தில் எய்மஸ் மருத்துவமனை அறிவிப்பை வரவேற்கிறேன். 2020-க்குள் அனைவருக்கும் வீடு என அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிக்காதது ஏமாற்றம் : இளங்கோவன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிக்கையில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது என்று கூறியுள்ளார்.மேலும்,1
அதேநேரத்தில் நிறுவன வரியை 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைத்திருப்பது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான அரசு என்பது வெளிப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்தால் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.கடுமையான நடவடிக்கை பயன் தருமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.

நிதியமைச்சர் எல்லாவற்றிற்கும் அரசு    -  தனியார் துறை இணைந்த முயற்சிகளையும், அந்நிய  முதலீட்டையும் தான் தொழில் வளர்ச்சிக்கு நம்பியிருக்கிறாரே தவிர, நமது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்கிற எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால் வேலை வாய்ப்பை பெருக்குவதற்கான எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்பதையே காட்டுகிறது. சேவை வரியை 12.34 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக அதிகரித்திருப்பது சாதாரண, நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கிற நடவடிக்கையாகும். கடந்த ஜூலை மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்காக பல அறிவிப்புகள் செய்யப்பட்டிருந்தன. அதில் குறிப்பாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக தமிழகத்தில் மருத்துவ நிலையம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மீண்டும் அதே அறிவிப்பை மறுபடியும் செய்திருப்பது கண்துடைப்பு நடவடிக்கையாகும். அதேபோல சென்னை கே.கே. நகரில் ரூ.180 கோடியில் 200 படுக்கைகளுடன் முதியோர் மருத்துவ நிறுவனம் தொடங்கப்படும் என்று கடந்த முறை அறிவித்திருந்தார். அதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்த நிதிநிலை அறிக்கையில் கூறப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது என்று கூறியுள்ளார்.

மக்களின் தேவையை பிரதிபலிக்காத பட்ஜெட் : விஜயகாந்த்

மக்களின் தேவையை முழுமையாக பிரதிபலிக்காத பட்ஜெட்டாகவே இருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், மத்தியில் மோடி தலைமையில் அரசு அமைந்த பிறகு முதல் முறையாக முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் இந்த பட்ஜெட் குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர்.
ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் தற்போது பனிரெண்டு ரூபாய் செலுத்தினால், இரண்டு லட்சம் விபத்துக் காப்பீட்டுத் தொகை கிடைக்கும் வகையில் தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டதை அறிவித்திருப்பது வரவேற்கக்கூடிய திட்டமாகும்.

நடுத்தர வர்க்கத்தை சார்ந்த மக்களும், அரசு அலுவலர்களும் பயன் பெரும் வகையில் வருமான வரி உச்ச வரம்பை அதிகரிக்காதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏழை எளிய, நடுத்தர மக்கள் என  அனைவருக்கும் விதிக்கப்படும் சேவை வரி உயர்த்தப்பட்டுள்ளது அதே சமயம் மிகப்பெரும் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்கனவே அவர்கள் செலுத்திய வரியில் இருந்து ஐந்து சதவிகிதம் குறைக்கப்பட்டும், சொத்து வரியும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது,  என்பது போன்ற அறிவிப்புகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் இந்த பட்ஜெட்டில் ஏழை எளிய மக்களுக்கான புதிய திட்டங்களும் இல்லை, அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற வழிவகையும் காணப்படவில்லை. ஆக மொத்தத்தில் மக்களின் தேவையை, முழுமையாக பிரதிபலிக்காத பட்ஜெட்டாகவே இதை தேசிய முற்போக்கு திராவிட கழகம் கருதுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

திட்டங்கள் இனிப்பு; வரிவிதிப்புகளில் புளிப்பு: ராமதாஸ் கருத்து

2015- 16 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை இனிப்பும், புளிப்பும் கலந்து தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாகவே அமைந்திருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
, '' நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த 2015-16ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றியிருக்கிறது. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கல்வி, சுகாதாரம் மற்றும் கட்டமைப்பு திட்டங்கள் வரவேற்கத்தக்கவை.கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தவும், மீட்கவும் நிதி அமைச்சர் அறிவித்துள்ள திட்டங்கள் மிகவும் அவசியமானவை. ஆனால், அவை எந்த அளவுக்கு செயல்படுத்தப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தனிநபர் வரிவிகிதம் தொடர்பான அறிவிப்புகள் மிகவும் ஏமாற்றமளிக்கின்றன.

பெரு நிறுவனங்களுக்கான வரியை 30 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக குறைத்துள்ள மத்திய அரசு, தனிநபர்களின் வருமானவரி விகிதத்தில் மாற்றம் செய்யாதது சரியல்ல. நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளைப் பார்க்கும்போது பெரு நிறுவனங்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்குமோ? என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

பணக்காரர்களுக்கு ஆதரவான பட்ஜெட்: திருமாவளவன்

மத்திய அரசின் பட்ஜெட் பணக்காரர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஆதரவானது. நடுத்தர வர்க்கத்தினருக்கும் ஏழை மக்களுக்கும் ஏமாற்றமளிப்பது
, '' பாஜக அரசு தாக்கல் செய்திருக்கும் முழுமையான முதல் பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினருக்கும் ஏழை மக்களுக்கும் மிகப் பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ஐந்து லட்சமாக உயர்த்தப்படும் எனத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்த பாஜக, இந்த பட்ஜெட்டில் ஒரு ரூபாயைக்கூட உயர்த்தாதது வாக்களித்த மக்களுக்குச் செய்திருக்கும் மிகப் பெரிய துரோகமாகும். அதே நேரத்தில் சொத்து வரியை ரத்துசெய்து இந்த அரசு பணக்காரர்களுக்கு உதவியிருக்கிறது.தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். பட்ஜெட் தொகையில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு இணையான தொகையை ஒதுக்கீடு செய்வதைத் தவிர்த்துவிட்டு, சிறு தொழில்முனைவோருக்காக ‘முத்ரா’ வங்கி தொடங்கப்படும். அதில் எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த தொழில் முனைவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்திருப்பதை வெறும் கண்துடைப்பு என்றே கருதவேண்டி உள்ளது.

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் இல்லை:வைகோ

மத்திய அரசு பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் மற்றும் அந்நிய நேரடி முதலீடுகளையே பெரிதும் நம்பி இருக்கிறது என்பதை பட்ஜெட் அறிக்கை காட்டுகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்., '' மத்திய அரசின் பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் இல்லை.
நாட்டின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருக்கிறார். ஆனால், மத்திய அரசு பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் மற்றும் அந்நிய நேரடி முதலீடுகளையே பெரிதும் நம்பி இருப்பதை நிதிநிலை அறிக்கை காட்டுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து