முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக அரசு ஊழியர்கள் வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை, 1 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பெறுப்பேற்க வேண்டும் என்று வேண்டி அரசு ஊழியர்கள் சென்னையில் பால்குடம் ஏந்தி சிறப்பு வழிபாடு நடத்தினர். தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம்( சி மற்றும் டி) ,அங்கன் வாடி பணியாளர்கள் சங்கம்,மற்றும் மகளிர் அணி சார்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பெறுப்பேற்க வேண்டும் என்று வேண்டி 1008 மகளிர் பால்குடங்களுடன் சென்னை சேப்பாக்கம் அரசு அலுவலக வளாகத்தில் உள்ள சிவசக்தி விநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

இந்த ஊர்வலம், சென்னை எம்.எல்.ஏ ஆஸ்டல் அருகே உள்ள இயற்கை விநாயகர் ஆலயத்தில் நிறைவடைந்தது. அங்கு இயற்கை விநாயகருக்கு சிறப்பு ஆராதனை மற்றும் பாலபிஷேகம் நடத்தப்பட்டது.இந்த பால் குடங்களின் பேரணியை சமூகநலத்துறை அமைச்சர் வளர்மதி துவக்கிவைத்தார்.

தமிழ்நாடு அரசு அலுலவர் கழகம்( சி மற்றும் டி) மாநில தலைவர் பொ.சௌந்திராஜன். முன்னிலைவகித்தார்.அங்கன்வாடி பணியாயளர்கள் மற்றும் உதவியாளர்கள் கழகம் (சிமற்றும் டி) தலைவர் சாந்தி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் திருவள்ளுர். சென்னை, காஞ்சிபுரம். மதுரை, திண்டுக்கல். ஈரோடு, விருதுநகர், சிகங்கை. விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு ஊழியர்கள் நூற்றுக்கணக்கில் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து