முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மார்ச் 7 ந்தேதி மாவட்டந்தோறும் பாசறை எழுச்சி தின பேரணி

ஞாயிற்றுக்கிழமை, 1 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்களின் பாசறையின் ஏழாம் ஆண்டு விழாவையொட்டி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்  பாசறை எழுச்சித்தின பேரணி நடத்த வேண்டுமென மக்களின் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுசெயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும்; புத்திளமை காண வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், எனது சிந்தனையில் உதித்த "கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை"" கடந்த 7.3.2008 அன்று தொடங்கப்பட்டது.
 
இந்தப் பாசறையில் இளம் வீரர்களும், வீராங்கனைகளும் நமது உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகளாக விளங்கி வருகின்றனர். நாளைய கழகத்திற்கு நாற்றுப் பண்ணைகளாகவும் இந்தப் பாசறை திகழ்ந்து வருகிறது. நாடு, மொழி, இனம் இந்த மூன்றையும் உயர்த்தும் முற்போக்கு பயிற்சிக் களங்களாகத் திகழும் இந்தப் பாசறையில், எனது தலைமையின் மீது ஈர்க்கப்பட்டு லட்சோப லட்சம் இளம் வீரர்களும், வீராங்கனைகளும் புதிய உத்வேகத்துடனும், மாறாத உறுதியுடனும், லட்சிய நோக்கத்துடனும், விசுவாசத்துடனும் கழகப் பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை தோற்றுவிக்கப்பட்ட தினத்தை நினைவு கூறும் வகையில், 7.3.2015 சனிக் கிழமை அன்று கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறையின் சார்பில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் "பாசறை எழுச்சி தினப் பேரணி"" நடைபெறும்.
 
அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்த மாவட்டங்களில் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்ள வேண்டும். மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சம்மந்தப்பட்ட மாவட்ட அதிமுக செயலாளர்களுடனும், நிர்வாகிகளுடனும்; அறிவிக்கப்படும் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளுடனும்; அதிமுக , எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து பாசறை எழுச்சி தினப் பேரணியை சிறப்பாக நடத்தி, அதன் விவரங்களை தலைமைக் கழகத்திற்கும், கழக நாளேடான `டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.' நாளிதழுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து