முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் முதல்வராக முஃப்தி முகமது சயீது பதவியேற்றார்

ஞாயிற்றுக்கிழமை, 1 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

ஸ்ரீநகர் - காஷ்மீர் மாநில முதல்வராக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் முஃப்தி மொகமது சயீது நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் அத்வானி, ஜோஷி, அமித் ஷா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
பா.ஜ.க.வின் நிர்மல் சிங் துணை முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். 2வது முறையாக கூட்டணி அரசிற்கு முப்தி முகதமு தலைமை வகிக்கிறார். 2002-ல் பிடிபி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 3 ஆண்டுகள் காஷ்மீர் முதல்வராக அவர் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

சுமார் 2 மாதங்களாக பிடிபி-பாஜக இடையே பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில் கடைசியாக கட்சி வேறுபாடுகள் சரி  செய்யப்பட்டு கூட்டணிக்கு வழிவகுக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து