முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏவுகணைகள் தன்னைத் தானே அழித்து கொள்ள உதவும் கருவி கண்டுபிடிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 1 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

பெங்களூர் - ஏவுகணைகள் தன்னைத் தானே அழித்துக் கொள்ள உதவும் கருவியை கெய்ன்ஸ் டெக்னாலஜி என்ற இந்திய நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

மைசூரைச் சேர்ந்த கெய்ன்ஸ் டெக்னாலஜி நிறுவனம் ஏவுகணைகள் தன்னைத் தானே அழிக்க உதவும் கருவியை கண்டுபிடித்துள்ளது. எலக்ட்ரானிக் சேஃப் ஆர்ம் அன்ட் ஃபயர் சிஸ்டம்(இஎஸ்ஏஎப்எஸ்) என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த கருவி ஏவுகணையை பரிசோதிக்கையில் ஏதாவது தவறு நேர்ந்துவிட்டால் அதை அழிக்க உதவும். அந்த கருவி ஐதராபாத்தில் உள்ள டி.ஆர்.டி.ஓ.வின் ஆய்வு மைத்தில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாக பாதுகாப்பு துறையில் உள்ளது கெய்ன்ஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி கெய்ன்ஸ் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் சரத் பட் கூறகையில்,
கெய்ன்ஸ் டெக்னாலஜி நிறுவனத்திற்கு மைசூர் தவிர நாட்டின் 7 பகுதிகளில் உள்ளது. பெங்களூரில் டிசைன் மையம், மும்பையில் சர்வீஸ் மையம் ஆகியவை உள்ளது. மேலும் ஜுரிச் மற்றும் ஹாம்பர்கிலும் அலுவலகங்கள் உள்ளது. பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டின் கடற்படை பிரிவுக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை பல காலமாக சப்ளை செய்து வரும் நிறுவனம் கெய்ன்ஸ். மேக் இன் இந்தியா திட்டம் உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களை உலகத் தரத்திற்கு எடுத்துச் செல்லும் என்றார்.

கெய்ன்ஸ் தயாரிப்புகளில் 30 சதவீதம் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ஹாலந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, சீனா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கெய்ன்ஸ் நிறுவனம் ப்ளூடூத் பார் கோடு ஸ்கேனர், ப்ளூடூத் பல்பு உள்ளிட்டவற்றை தயாரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து