முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்துறை அமைச்சகத்துக்கு ரூ. 62 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

ஞாயிற்றுக்கிழமை, 1 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - உள்துறை அமைச்சகத்துக்கு பட்ஜெட்டில் ரூ.62,124.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டை விட 10.2 சதவீதம் அதிகமாகும்.

மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி உரையாற்றிய போது இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், பெண்களின் பாதுகாப்பு, காஷ்மீர் பண்டிட்டுகளின் மறுவாழ்வு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு போன்றவற்றுக்குச் சிறப்புக் கவனம் அளித்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்.
கடந்த நிதி ஆண்டில், உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.56,372.45 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.62,124.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பண்டிட்டுகளின் மறுவாழ்வுக்காக இந்த ஆண்டில் ரூ.580 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உலகின் பெரிய துணை ராணுவமான சி.ஆர்.பி.எஃப் அமைப்புக்கு, ரூ.14,089.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல எல்லைப் பாதுகாப்புப் படைக்கு, ரூ.12,517.82 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
நாட்டின் பெரும்பாலான விமான நிலையங்கள், தொழிற்சாலைகள், அணுமின் நிலையங்கள், டெல்லி மெட்ரோ உள்ளிட்ட பலவற்றைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினருக்கு ரூ. 5,196.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் உளவுத்துறைக்கு ரூ.1,270.40 கோடியும், டெல்லி காவல்துறைக்கு ரூ.5,027.98 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். படைவீரர்கள் தங்கும் முகாம்கள், குடியிருப்புகள், காவல்துறை அலுவலகங்கள், மத்திய பாதுகாப்பு அமைப்புகளுக்கான கட்டிடங்கள் போன்றவற்றை கட்டுவதற்காக ரூ.2,426.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து