முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி ஆதாரத்தில் நான்கில் ஒரு பங்கு கடன்

ஞாயிற்றுக்கிழமை, 1 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - நிதி ஆதாரத்தில் நான்கில் ஒரு பங்கு கடனாக பெறப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரசின் ஒவ்வொரு ஒரு ரூபாய் நிதி ஆதாரத்திலும் கடன் மூலம் திரட்டப்படும் தொகை 24 பைசாவாக மாறாமல் இருக்கும். இதுபோல நடப்பு நதியாண்டில், 63 பைசாவாக இருந்த நேரடி மற்றும் மறைமுக வரி வருமானத்தின் பங்கு அடுத்த நிதியாண்டில் 62 பைசாவாக இருக்கும்.
 
நடப்பு நிதியாண்டில் ரூ.4.53 லட்சம் கோடியாக உள்ள அரசின் ஒட்டுமொத்த கடன் தொகை, அடுத்த நிதியாண்டில் ரூ.4.56 லட்சம் கோடியாக இருக்கும். செலவைப் பொருத்தவரை, ஒவ்வொரு ஒரு ரூபாய் செலவிலும் 20 பைசா முதலீட்டுக்கான வட்டியாக வழங்கப்படும். இதுதான் அதிகபட்ச செலவாகும். இதற்கு அடுத்தபடியாக மத்திய திட்ட ஒதுக்கீட்டுக்கான செலவு மாறாமல் 11 பைசாவாக இருக்கும்.

நடப்பு நிதியாண்டி 10 பைசாவாக உள்ள பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு, வரும் நிதியாண்டில் 11 பைசாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வருவாய் ஆதாரத்தைப் பொருத்தவரை, மிகப்பெரியதாக விளங்குவது கார்ப்பரேட் வரி. இது 20 பைசாவாக இருக்கும். இது நடப்பு நிதியாண்டைவிட ஒரு பைசா குறைவு ஆகும். சேவை வரி 12.36 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதன்மூலம் திரட்டப்படும் வருமானம் 10 பைசாவிலிருந்து 9 பைசாவாக இருக்கும்.

அடுத்த நிதியாண்டில் வருமான வரி செலுத்தும் வரம்புக்குள் அதிகப்படியானோர் வர வாய்ப்புள்ளதால் இதன்மூலம் திரட்டப்படும் வருமானம் 13 பைசாவிலிருந்து 14 பைசாவாக அதிகரிக்கும். உற்பத்தி மற்றும் சுங்க வரி உள்ளிட்ட மறைமுக வரி மூலம் 19 பைசா கிடைக்கும். ஒட்டு மொத்த வரி வருவாய் ரூ.14,49,490 கோடியாக இருக்கும். இதில் மாநில அரசுகளுக்கு ரூ.5,23,958 கோடி வழங்கப்படும். மீதம் உள்ள ரூ.9,19,842 கோடி மத்திய அரசின் திட்டங்களுக்கு செலவிடப்படும். பொதுத் துறை நிறுவன பங்குகள் விற்பனை உட்பட வரியில்லா இனங்கள் மூலம் அடுத்த நிதியாண்டில் ரூ.2,21,733 கோடி வருமானம் திரட்டப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து