முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரே போராட்டத்தால் அரசியல் கட்சிகளுக்குத்தான் லாபம்

திங்கட்கிழமை, 2 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

காசியாபாத் - அன்னா ஹசாரே போராட்டத்தால் அரசியல் கட்சிகள் தான் லாபம் அடைகின்றன என்று மத்திய அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார்.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கொண்டு வர முயற்சிக்கும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த வாரம் அவர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நடத்திய போராட்டத்தில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராஜ்பாப்பர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கு பாஜ தரப்பில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

இதுகுறித்து காசியாபாத்தில் நடைபெற்ற ஹோலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வி.கே.சிங் கூறுகையில், அன்னா ஹசாரே நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை. தற்போது அந்த விவகாரத்தை தவறானவர்கள் கையில் ஒப்படைத்துள்ளார்.

அன்னா ஹசாரேவின் போராட்டத்தால் அரசியல் கட்சிகள் தான் லாபம் அடைந்து வருகின்றன. அன்னா ஹசாரேயுடன் கலந்து கொள்ளும் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் காரணமாக அவரது போராளி என்ற இமேஜ் சரிவடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் பாரபட்சமாக அன்னா ஹசாரே நடந்து. கொள்கிறார். அவரால் லாபம் அடைய நினைக்கும் அரசியல் கட்சிகளிடம் இருந்து அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

நிலம் கையகப்படுத்தும் சட்டம் தொடர்பான மசோதாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பாக மாநில முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு அவர்களது பரிந்துரைகளும் கேட்கப்பட்டுள்ளன. அந்த சட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு பயன் அளிக்கக் கூடியதாகும். ஒருசில கட்சிகள் அரசியல் லாபம் கருதி இதனை எதிர்த்து வருகின்றனர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து