முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 மாநிலங்களில் காங்., தலைவர்களை மாற்றத் திட்டம்

திங்கட்கிழமை, 2 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - குஜராத், மத்தியப் பிரதேசம், தெலங்கானா மற்றும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்களை மாற்ற சோனியா திட்டமிட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றத் தேர்தலை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து கட்சியில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவருவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உயர்மட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா பதவி விலகுவதாக இணையதள பக்கத்தில் செய்தி வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான பாரத் சிங் சோலங்கி மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் பாஜ அரசில் நடைபெற்று வரும் ஊழல் குற்றச்சாட்டு குறித்து படுமையாக விமர்சிக்க தகுதியான மாநில தலைவரை நியமிக்க வேண்டும் என்று மேலிடம் விரும்புகிறது. இப்பரிசீலனையில் திக்விஜய் சிங், கமல்நாத் மற்றும் சுரேஷ் பச்சோரி பெயர்கள் இருந்தாலும், ஜோதிராத்தியா சிந்தியா நியமிக்கப்படலாம். பஞ்சாப் மாநிலத்தில் தற்போதைய தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா நீக்கப்பட்டு, அமீர்தசரஸ் தொகுதியில் அருண் ஜெட்லியை வென்ற கேப்டன் அம்ரிந்தர் சிங் தலைவராக நியமிக்கப்படுவார்.

இதே போல் தெலங்கானா மாநிலத்தில் புதிய காங்கிரஸ் தலைமையையும், டெல்லியில் மீண்டும் அஜய் மக்கான் தலைவராகத் தேர்ந்தெடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான் அறிவிப்புகள் இவ்வார இருதிக்குள் வெளியாகும் என்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து