முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து நிதிஷ் உண்ணாவிரதம்

திங்கட்கிழமை, 2 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

பாட்னா - மத்திய அரசு கொண்டு வரவுள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நட்தத பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் திட்டமிட்டுள்ளார். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசு சில மாற்றங்களை கொண்டு வந்தது.

இந்த சட்டதிருத்தத்தை கடந்த குளிர்கால் கூட்ட தொடரிலே நிறைவேற்ற திட்டமிட்டிருந்தது. அந்த சமயத்தில் பாஜ தலைவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சு காரணமாக பாராளுமன்றத்தை எதிர்கட்சிகல் தொடர்ந்து முடக்கிவந்தன. மேலும் மாநிலங்கள் அவையில் பாஜ கூட்டணிக்கு போதிய பலம் இல்லாத காரணத்தால் இந்த சட்டதிருத்தம் அப்போது தாக்கல் செய்யப்படவில்லை.

கூட்ட தொடர் முடிவுக்கு வந்த மறுநாள் நிலம் கையகப்படுத்தும் மசோதா உள்பட 6 முக்கிய மசோதாக்கள் அவசர சட்டங்களாக வெளியிடப்பட்டன. இதற்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியும் ஒப்புதல் அளித்தார். பின்னர் முடியரசு தின உரையின் போது, அவசர சட்டங்கல் கூடாது என மத்திய அரசை கண்டித்தார். அவசர சட்டங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.

இதை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடரில் அவசர சட்டங்களுக்கு பதிலாக முறையான நிலம் கையகப்படுத்தும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த வாரம் இந்த மசோதா எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையில் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. மசோதா நிறைவேற எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பாஜ கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அதன் கூட்டணி கட்சிகளான சிவசேனா, அகாலிதளம் இந்த மசோதாவு்கு எதிர்த்து வருகின்றன.

இந்நிலையில் இந்த சட்டத்துக்கு எதிராக ஒருநாள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார். பாட்னாவில் நடைபெற்ற பொது கூட்டத்தில் நிதிஷ்குமார் பேசியதாவது:

மத்திய அரசு கொண்டுவரவுள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஒரு கருப்புசட்டம். விவசாயிகளின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த மோடி தற்போது அவர்களை மறந்து விட்டார். அவர்களது நிலங்களை பறித்து தொழிலதிபர்களுக்கு தாரை வார்க்க பார்க்கிறார். இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். தவறினால் நாடு முழுவதுபம் போராட்டங்கள் வெடிக்கும். இந்த சட்டத்துக்கு எதிராக ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன். இதில் அனைத்து தரப்பினரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு நிதிஷ் குமார் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து