முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐகோர்ட் நீதிபதியை விசாரிக்க 3 நீதிபதிகள் குழு: சுப்ரீம் கோர்ட்

திங்கட்கிழமை, 2 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - மத்திய பிரதேச  மாநிலத்தில் கடந்த ஆண்டு பெண் நீதிபதி ஒருவர் ஐகோர்ட்டு நீதிபதி மீது செக்ஸ் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

குவாலியர் செசன்ஸ் கோர்ட்டில் அந்த பெண் நீதிபதி பணியாற்றினார். அவருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மத்திய பிரதேச ஐகோர்ட்டு நீதிபதியிடம் இரு ஒரு தகவல் வந்தது. அதில் ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் பெண் நீதிபதி கலந்து கொண்டு குத்துப் பாட்டுக்கு நடனமாட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்ததாக பெண்  நீதிபதி குற்றச்சாட்டு கூறினார்.

அன்றைய தினம் தனது மகள் பிறந்த நாள் நிகழ்ச்சியில் இருப்பதாக கூறி ஐகோர்ட்டு நீதிபதியின் அழைப்பை புறக்கணித்து விட்டதாக பெண் நீதிபதி கூறினார். மேலும் செக்ஸ் புகார்ளும் கூறினார். நீதிபதியின் விருப்பத்துக்கு உடன் படாததால் தான் இடம் மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதுபற்றி பெண் நீதிபதி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கும், சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகளும் புகார் மனுக்கள் அனுப்பினார். இந்த புகார் வெளியானதும் மத்திய பிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உடனடியாக விசாரணை நடத்த குழு ஒன்றை அமைத்தார். இதை ஏற்க மறுத்த பெண் நீதிபதி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் பெண் நீதிபதியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது.

பெண் நீதிபதியின் புகார் தொடர்பாக  புதிய விசாரணை குழுவை நியமிக்குமாறு மத்திய பிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி தனது பதவியையும்  ராஜினாமா செய்தார். இதற்கிடையே மத்திய பிரதேச ஐகோர்ட்டு அமைத்த விசாரணைக்குழு, பெண் நீதிபதி அளித்த புகார் பற்றி விசாரணை நடத்தியது. முதல் கட்ட விசாரணை அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணை  அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து பரிசீலித்து புதிதாக விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

2 ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள், ஒரு ஐகோர்ட்டு நீதிபதி ஆகிய 3 பேர் கொண்ட குழுவை தலைமை நீதிபதி தத்து நியமித்துள்ளார். இந்த  3 பேர் குழு பெண் நீதிபதியின் புகார் பற்றியும் அவர் எந்த சூழ்நிலையில் புகார் கூறினார் என்றும் விசாரணை நடத்தும். புகார் கூறிய பெண் நீதிபதியிடமும், புகாருக்கு ஆளான ஐகோர்ட்டு நீதிபதியிடமும் சாட்சிகளிடமும் விசாரணை நடத்துவார்கள். விசாரணையில் குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டால் ஐகோர்ட்டு நீதிபதி நீக்கப்படுவார். முதலில் அவரை பதவி விலகுமாறு தலைமை நீதிபதி கூறுவார். அவர் பதவி விலகாவிட்டால் பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இது தொடர் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் தலைமை நீதிபதி கடிதம் எழுதுவார். அதன் அடிப்படையில் நீதிபதியை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்து உத்தரவிடுவார். 3 நீதிபதிகள் விசாரணையின் முடிவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து