முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிக்கு பதிலாக புடின் படம் ஒளிபரப்பிய டி.வி. நிறுவனம்

திங்கட்கிழமை, 2 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - மேலைநாடுகளை சேர்ந்த பிணைக்கைதிகள் 5 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் தலை துண்டித்து கொலை செய்தனர். அவர்களை கொலை செய்த முகமூடி அணிந்த தீவிரவாதி கையில் கத்தியுடன் இருப்பது போன்று வீடியோ வெளியிடப்பட்டது. அந்த தீவிரவாதி யார் என்ற  விவரம் தெரியாமல் இருந்தது.

அவரை ஜிகாதி ஜான் என அழைத்து வந்தனர். இந்த நிலையில் முகமூடி தீவிரவாதியின் பெயர் முகமது என்வாஷி. அவர் லண்டனை சேர்ந்தவர் என அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை சமீபத்தில் செய்தி வெளியிட்டது. இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் சி.என்.என்.டி.வி. சமீபத்தில் இது குறித்து செய்தி வெளியிட்டது. அப்போது ஜிகாதி ஜான் படத்துக்கு பதிலாக ரஷ்ய அதிபர் புடினின் படத்தை தவறுதலாக ஒளிபரப்பியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே சுதாரித்து கொண்ட டி.வி. ஊழியர்கள் புடின் படம் ஒளிபரப்புவதை நிறுத்தி விட்டனர். இதற்கிடையே சி.என்.என்.டி.வி. நிறுவனம் ரஷ்யாவின் தாஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தது. அப்போது தவறுதலாக புடின் படம் ஒளிபரப்பப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டது. இது போன்று தவறுதலாக ஒளிபரப்பியது முதல் முறையல்ல. கடந்த மாதம் உக்ரைனுக்கு பதிலாக ரஷ்யா வீடியோவை இந்த டி.வி. தவறுதலாக ஒளிபரப்பியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து