முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முப்தி முஹமதுவின் கருத்தை நான் ஆதரிக்கவில்லை

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முஹமது சயிதுவின் கருத்தை தாம் ஆதரிக்கவில்லை என்று பாராளுமன்ற ராஜ்யசபையில் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது லோக்சபையில் ஏற்கனவே பிரதமர் மோடி பதில் அளித்து பேசி இருந்தார். நேற்று ராஜ்யசபையில் தனது பதிலுரையை அவர் பதிவு செய்தார்.

முன்னதாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் 2 வது நாளாக அமளியில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முஹமதுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இவ்வாறு அமளியில் ஈடுப்பட்டனர். பிரதமர் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் போர்கொடி உயர்த்தினர். இந்த நிலையில், பிரதமர் மோடி தனது பதிலுரையை ராஜ்யசபையில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

முப்தி முஹமதுவின் கருத்தை நான் ஆதரிக்கவில்லை அதற்கு மேல் விளக்கம் சொல்லமுடியாது. ஒவ்வொருவரின் கருத்துக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் திட்டங்களை நாங்கள் காப்பி அடிப்பதாக சொல்கிறார்கள். உண்மையென்வென்றால் வாஜ்பாஜ் அரசின் திட்டங்களை தான் அவர்கள் காப்பியடித்தார்கள். நாங்கள் கார்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக சொல்கிறார்கள். தூய்மை இந்தியா திட்டம் தொழில் அதிபர்களுக்கான திட்டமா? பள்ளிக்குழந்தைகளுக்கு கழிப்பிடம் கட்டுவது தொழிலதிபர்களுக்கான திட்டமா? என்று கேட்க விரும்புகிறேன்.

இந்தியாவை ஆள்வது நாங்கள் அல்ல மக்கள் தான். ஜனநாயகத்தில் மிரட்டல் மூலம் எதையும் சாதிக்க முடியாது. நான் 14 வருடமாக பல மிரட்டல்களை சந்தித்தவன். எனவே, மிரட்டல் என்பது கூடாது. இவ்வாறு அவர் பேசிக்கொண்டிருந்த போது மாயாவதி குறுக்கிட்டு பேசினார். அப்போது,  தனியார் துறையிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்றும் மாயாவதி வலியுறுத்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து