முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் நம்பர் 1 பணக்காரராக பில்கேட்ஸ் 16-வது முறையாக தேர்வு

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

நியூயார்க் - அமெரிக்காவின் போர்ஸ் மத்திரிக்கை உலகின் பணக்காரர்கள் பட்டியலை கடந்த 21 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு பணக்காரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அவர்களில் அமெரிக்கா வின் மைக்ரோ சர்பட், கம்ப்யூட்டர் நிறுவனர் பில்கேட்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.4 லட்சத்து 90 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.195 கோடி அதிகமாகும். இருவருக்கு அடுத்த படியாக மெக்சிகோ தொழில் அதிபர் கார்லோஸ் ஸ்லிம் 2-வது இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.4 லட்சத்து 78 ஆயிரம் கோடி.
 
இவர்கள் தவிர வாரன்பப்பெட் 3-வது இடத்தையும். அமான்சியோ ஓர்டெகா 4-வது இடத்தையும், லார்ரி எல்லிசன் 5-வது இடத்தையும், சார்லஸ் கோச் 6-வது இடத்தையும், டேவிட் கோச் 7-வது இடத்தையும், கிறிஸ்டி வால்டன் 8-வது இடத்தையும், லிலியான் பெட்டன் கோர்ட் 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர். உலக பணக்காரர்கள் பட்டியலை போர்ஸ் பத்திரிகை கடந்த 21 ஆண்டுகளாக வெளியிட்டுள்ளது. அதில் பில்கேட்ஸ் 16 தடவை முதலிடத்தில் இருந்துள்ளார். இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் முதல் 20 இடங்களில் 15 பேர் அமெரிக்கர்கள் ஆவர். பணக்கார பெண்மணிகள் பட்டியலில் கிறிஸ்டி வால்டன் முதலிடம் பிடித்துள்ளார்.

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷுகர்பெர்க் முதல் 20 பணக்காரர்கள் பட்டியலில் 16-வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 6 ஆயிரம் கோடி தற்போது தான் முன்முறையாக இவர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார். சர்வதேச அளவில் தற்போது 1826 கோடீஸ்வரர் கள் உள்ளனர். இது கடந்த ஆண்டை விட 181 பேர் அதிகமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து